4ஜி நெட்வொர்க் சேவைகளை சிறப்பாக வழங்கும் இந்திய நகரங்கள் பட்டியல்

தமிழகம் எந்த இடத்தைப் பிடித்துள்ளது?

By: Updated: September 6, 2018, 03:59:22 PM

4ஜி நெட்வொர்க் சிறப்பான சேவையை அளிக்கும் மாநிலங்கள். மொபைல் அனலடிக் நிறுவனமான ஓப்பன் சிக்னல் என்ற நிறுவனம் இந்தியாவில் இருக்கும் 22 டெலிகாம் வட்டங்களில் கருத்துக் கணிப்பினை மேற்கொண்டது.

அதில் 90.7 % ஸ்கோர் அடித்து முதல் இடத்தில் இருக்கிறது கொல்கத்தா நிறுவனம். சிறப்பான 4ஜி நெட்வொர்க் சேவைகளை வழங்கும் முதன்மையான நகரங்களில் முதல் இடம் பிடித்திருக்கிறது கொல்கத்தா.

அதனைத் தொடர்ந்து 89.82% உடன் பஞ்சாப் மாநிலமும், 89.17 % 4ஜி இணைய சேவைகளை வழங்கி பிஹார் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த 4ஜி சேவை சிறந்த 4ஜி சேவைகளை கொண்டுள்ள மாநிலங்கள்

இந்தியாவில் இருக்கும் அனைத்து டெலிகாம் வட்டங்களும் 80% 4ஜி LTE நெட்வொர்க்கினை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது என்று ஓப்பன் சிக்னல் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க

இந்த பகுதிகளில் பயன்படுத்தப்படும் ஏர்டெல் நெட்வொர்க் 9.31 Mbps வேகத்திலும், ஐடியா நெட்வொர்க் 7.27 Mbps வேகத்திலும், வோடஃபோன் 6.98 Mbps வேகத்திலும், ரிலையன்ஸ் ஜியோவில் 5.13 Mbps என்ற வேகத்திலும் டேட்டாவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடிகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:List of 4g availability in indias 22 telecom circles as per a new analysis by mobile analytic company opensignal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X