Motorola: இந்த மோட்டோரோலா போன்களில் ஜியோ 5ஜி இலவசமாக பயன்படுத்தலாம்.. முழு பட்டியல் இங்கே! | Indian Express Tamil

Motorola: இந்த மோட்டோரோலா போன்களில் ஜியோ 5ஜி இலவசம்.. முழு பட்டியல் இங்கே!

Motorola smartphones: மோட்டோரோலாவின் எந்தெந்த போன்களில் ஜியோ 5ஜி பயன்படுத்த முடியும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Motorola: இந்த மோட்டோரோலா போன்களில் ஜியோ 5ஜி இலவசம்.. முழு பட்டியல் இங்கே!

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவைகளை வழங்கி வருகின்றன. மெட்ரோ நகரங்கள் தொடங்கி படிப்படியாக பல்வேறு இடங்களுக்கும் சேவைகளை வழங்கி வருகின்றன.
தங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரிக்கும் ஸ்மார்ட்போனாக இருந்தால் நேரடியாக 5ஜி பயன்படுத்தலாம். இல்லை என்றால் தங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு உள்ளதா எனப் பார்த்து, நிறுவனங்கள் கொடுக்கும் சாப்ட்வேர் அப்டேட் பயன்படுத்தி 5ஜி சேவை பயன்படுத்தலாம். அதாவது, நீங்கள் வசிக்கும் இடத்தில் 5ஜி சேவை வழங்கப்படுகிறது என்றால் 5ஜி நெட்வொர்க்கிற்கு மாறி சேவையைப் பயன்படுத்தலாம்.

அந்தவகையில் மோட்டோரோலாவின் எந்தெந்த போன்களில் நேரடியாகவோ அல்லது அப்டேட்டுடனோ ஜியோ 5ஜி பயன்படுத்த முடியும் என்பது குறித்து இங்கு பார்ப்போம். மோட்டோரோலாவின் 10 ஸ்மார்ட்போன்களில் ஜியோ 5ஜி பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் NSA (non-standalone) முறையிலும் , ஜியோ SA (standalone) தொழில் நுட்ப முறையிலும் 5ஜி சேவை வழங்கி வருகின்றன.

மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி, 5ஜி ஆதரிக்கும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் 11 முதல் 13 5G பேண்டுகளை கேரியர் ஒருங்கிணைப்பு மற்றும் 4X4 MIMO உடன் மேம்படுத்தப்பட்ட செல்லுலார் வரவேற்பை பெறுகிறது. மேலும் குறைந்த பட்சமாக n28 போன்ற பேண்டுகளையும் ஆதரிப்பதாக கூறியுள்ளது .

இலவச 5G

Motorola 5G ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் பகுதியில் இலவச ஜியோ 5ஜி சேவை பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.
அதற்கு முதலில் உங்கள் போனை சமீபத்திய சாப்ட்வேர் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். பின் My Jio app மூலம் 5ஜி welcome offer ஆக்டிவேட் செய்ய வேண்டும். மோட்டோரோலாவின் இந்த போன்களில் ஜியோ 5ஜி இலவசமாக பயன்படுத்தலாம்.

Motorola edge 30 Ultra
Motorola edge 30 Fusion
Moto G62 5G
Motorola Edge 30
Moto G82 5G
Motorola Edge 30 pro
Moto G71 5G
Moto G51 5G
Motorola Edge 20
Motorola Edge 20 Fusion

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: List of motorola smartphones that support jio 5g network in india