வீட்டினர் பாதுகாப்பில் விளையாட வேண்டாமே! ரூ. 4000 விலைக்கு சி.சி.டி.வி. கேமராக்கள் இதோ…

Top 5 Best Security Cameras Under Rs 4,000 : செக்யூரிட்டி கேமராவை உங்களின் ஸ்மார்ட்போனில் கனெக்ட் செய்து உங்களின் வீட்டில் நடப்பதை உடனே உங்களால் ரியல் டைமில் காண முடியும்.

By: Updated: March 2, 2020, 02:12:18 PM

Top 5 best security camera, CCTV cameraவீட்டில் இருப்பவர்கள், நம்மைச் சுற்றி இருப்பவர்களின் பாதுகாப்பிற்கு நாம் அதிக முக்கியத்துவம் தரும் காலமாக இது இருக்கிறது. சில நேரங்களில் எலெக்ட்ரானிக்ஸ் டிவைஸ்கள் தான் நமக்கு நேர இருக்கும் பல்வேறு விதமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. நீங்கள் குறைந்த விலையில் சி.சி.டி.வி கேமராக்கள் வாங்க வேண்டுமா? அப்போது இந்த டிவைஸ்களை ட்ரை செய்து பாருங்கள்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Zebronics ZEB Home Security Camera

இந்த ஹோம் செக்யூரிட்டி கேமராவின் விலை வெறும் ரூ. 3,599 தான். இதில் இருவழி ஆடியோ தொடர்பு, ஸ்மார்ட் ட்ராக்கிங், சௌண்ட் டிடெக்சன், மற்றும் ஃபேஸ் டிடெக்சன் டெக்னாலஜி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு சப்போர்ட் ஆகிறது இந்த டிவைஸ். செக்யூரிட்டி கேமராவை உங்களின் ஸ்மார்ட்போனில் கனெக்ட் செய்து உங்களின் வீட்டில் நடப்பதை உடனே உங்களால் ரியல் டைமில் காண முடியும்.

YI Home Camera Wireless

YI 87001 என்ற வயர்லெஸ் கேமரா வெறும் ரூ. 2,499க்கு விற்பனையாகிறது. எச்.டி. வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 2-வே ஆடியோ வசதியுடன் வெளியாகிறது இந்த கேமரா. 111 டிகிரி வைட் ஆங்கிளில் இந்த கேமரா காட்சிகளை பதிவு செய்கிறது. மேலும் 4 மடங்கு டிஜிட்டல் ஸூம், நைட் விஷன், இன்ஃப்ரா ரெட் நான் இன்வேசிவ் சென்சார் ஆகியவையும் கொண்டுள்ளது. உங்களின் ஸ்மார்ட்போன் மூலமாக நீங்கள் உங்கள் வீட்டில் நடப்பதை ரியல் டைம் ஸ்டீரிமிங்கில் கண்டு களிக்கலாம்.

Wipro Next Smart Camera

விப்ரோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் கேமராவின் விலை ரூ. 3,033 ஆகும். இந்த கேமராவும் ரியல் டைம் மானிட்டரிங்கிற்கு உதவுகிறது. 2 – வே கம்யூனிகேசன், பில்ட் – இன் – மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது. விப்ரோ கேமரா நைட் விஷன் மற்றும் டில்ட் போன்ற ஆப்சன்களுடனும் வெளியாகிறது. 120 டிகிரி வ்யூவில் எச்.டி. வீடியோவை ரெக்கார்ட் செய்ய இயலும்.

Mi WiFi Home Security Camera

இந்த கேமராவால் உங்களால் 360 டிகிரியில் செக்யூரிட்டி கவர் செய்ய இயலும். இந்த கேமரா ரூ. 2,699க்கு விற்பனை ஆகின்றது. இதில் ஏ.ஐ. மோசன் டிடெக்டர் அலெர்ட், இன்ஃப்ராரெட் நைட் விஷன், டால்க்பேக் போன்ற சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது. 20 எம்.பி. கேமரா சென்சாரின் ஃபீல்ட் வ்யூ 110டிகிரி ஆகும். 1080 பிக்சல் ரெசல்யூசனில் இந்த காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது.

 best security cameras, security camera under 4000 best security cameras, security camera under 4000

TP-Link Smart Cam Home WiFi Camera

இந்த கேமரா ரூ. 2,499க்கு விற்பனையாகிறது. பேன் மற்றும் டில்ட் இதில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் 114 டிகிரி ஃபீல்ட் வ்யூ இருக்கிறது. எச்எச்.டி வீடியோவை 1080 பிக்சல் என்ற ரெசலியூசனில் ரெக்கார்ட் செய்கிறது இந்த கேமரா. நைட் விஷன் மற்றும் 2-வே கம்யூனிகேசன் ஆகியவையும் இதில் இடம் பெற்றுள்ளது. அலெக்சா மற்றும் கூகுளை இந்த கேமரா சப்போர்ட் செய்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:List of top 5 best security camera cctv camera in india under rs 4000 in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X