இந்தியாவில் முதன்முதலாக ஆன்லைன் தொழில்நுட்ப மாநாடு!

இந்தியாவின் முதல் பிரத்தியேக ஆன்லைன் டெக்னாலஜி மார்க்கெட்டிங் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு

அவசரமும், ஆடம்பரமும் நிறைந்த இந்த உலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பெற்றுள்ளது தொழில்நுட்பம். இன்றைய இளைஞர்களின் இரண்டு கைகளையும் பலமாக கட்டிப்போட்டு வைத்திருப்பது இந்த தொழில் நுட்பம் தான்.

வேலையில் தொடங்கி வீட்டில் இருக்கும் பொருட்கள் வரை அனைத்துமே தொழில்நுட்பத்தினால் தான் இயங்கி வருகிறது. அந்த வகையில், தொழில்நுட்பம் குறித்த அடுத்த கட்ட நகர்விற்கு தயராகிவிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம். இந்திய எக்ஸ்ப்ரெஸ்.காம் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் பிரத்தியேக ஆன்லைன் டெக்னாலஜி மார்க்கெட்டிங் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு ஆன்லைனில் துவங்குகிறது.

iedecode.com இல் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது.இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் உலகெங்கிலும் தொழில்துறையில் சாதித்த சாதனையாளர்கள் கலந்துக் கொள்கின்றனர். மென்பொருள், வீட்டு தொழில்நுட்பம், வடிவமைப்பின் பொது கருப்பொருள் என பல பிரிவுகளின் கீழ் சிறப்பு விருந்தினர்கள் சொற்பொழிவாற்றுகின்றனர்.

இதுக் குறித்து பேசிய இந்திய எக்ஸ்பிரஸ் குழுமத்தின் டிஜிட்டல் தலைமை நிர்வாக அதிகாரி துர்கா ரகுநாத், “இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க  யூசர்களின் தேவையை உணர்ந்து வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும்.  தொழில் நுட்ப துறையில் இருக்கும் பல்வேறு சாதனையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஊடகவியல் துறையில் தனக்கென தனி முத்திரையை ஏற்கனவே பதித்து விட்டது. இப்போது தனது அடுத்தக்கட்ட நகர்வை டிஜிட்டலில் துவக்கியுள்ளது, “ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், தி போஸ்டன் கன்சல்டிங் குரூப் பங்குதாரரும் இயக்குநருமான ராஜீவ் குப்தா,  இண்டெக்டோவின் அறிவுரையாளர், என பலர் கலந்துக் கொள்கின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close