18.4 கோடி கூகுள், பேஸ்புக், இன்ஸ்டா பயனர்களின் லாகின் தரவுகள் கசிவு!

பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் அதிகமான பயனர்கள் (Username), கடவுச்சொற்கள் (password) ஆன்லைனில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
users-leaked-

18.4 கோடி கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களின் Login தரவுகள் கசிவு!

பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் அதிகமான பயனர்கள் (Username), கடவுச்சொற்கள் (password) ஆன்லைனில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இவற்றின் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் மற்றும் அங்கீகார URL களைக் கொண்ட பாதுகாப்பற்ற தளம் ஆன்லைனில் கண்டறியப்பட்டது. இதுமட்டுமின்றி, வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இந்தத் தளத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சைபர் குற்றவாளிகளால் எளிதில் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை உருவாக்கி உள்ளது. சைபர் குற்றவாளிகள், வணிக ஆவணங்களைத் திருடவும், பெருநிறுவனங்களை உளவு பார்க்கவும், ரான்சம்வேர் தாக்குதல்களைத் நடத்தவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்ஃபோஸ்டீலர் மால்வேர்:

Advertisment
Advertisements

இந்தத் தரவு இன்ஃபோஸ்டீலிங் மால்வேர் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லம்மா ஸ்டீலர் போன்ற மால்வேர்களை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்யப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள். மேலும், இத்தகைய மால்வேர் தனிப்பட்ட சாதனங்களைப் பாதித்து, பாதுகாக்கப்பட்ட கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள், குக்கீகளை திருடுகிறது

பயனர்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்ஃபிக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஒரே பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சைபர் குற்றவாளிகள் கணக்குகளை அணுகினால், அவர்கள் ஆன்லைன் மோசடி, அடையாள திருட்டு மற்றும் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம். எனவே தரவு மீறல்களிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வழி இல்லை என்றாலும், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தத் தரவு கசிவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பிரச்னையை ஆராய்ந்து வருகின்றனர்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: