New Update
00:00
/ 00:00
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜுன் 1 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மெட்டா நிறுவனம் தனது தளங்களில் தவறான, போலி செய்திகளை கட்டுப்படுத்த விரிவான திட்டத்தை அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், த்ரெட்ஸ் தளங்களில் தவறான செய்திகளை கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ஒரு விரிவான திட்டத்தை வெளியிட்டுள்ளது. சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, நிறுவனத்தின் பல்வேறு பயன்பாடுகளில் நிகழ்நேரத்தில் தகுந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த இந்தியாவை அடிப்படையாக கொண்ட தேர்தல் செயல்பாட்டு மையத்தை இது செயல்படுத்தும் என்று மெட்டா கூறியது.
மெட்டாவின் செயல்பாட்டு மையத்தில் டேட்டா சைன்ஸ், பொறியியல், ஆராய்ச்சி, செயல்பாடுகள், உள்ளடக்கக் கொள்கை மற்றும் சட்டக் குழுக்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறுவர் எனக் கூறியுள்ளது. அதோடு தேர்தல் ஆணையத்துடன் இணைந்தும் செயல்படும் என கூறியுள்ளது.
வன்முறை, தீங்கு விளைவிக்கும் தகவல்கள் போன்றவற்றை ஏற்கனவே நீக்கிவிட்டதாக மெட்டா கூறுகிறது. மதம் மற்றும் அது தொடர்பான வன்முறை, போராட்டம் தொடர்பான தகவல்களை மெட்டா அதன் "உள்ளூர் பார்ட்னர்" உடன் இணைந்து தகவலின் அடிப்படையில் நீக்கும் என்று கூறியுள்ளது.
ஃபேஸ்புக் தாய் நிறுவனம் தனது independent உண்மைச் சரிபார்ப்பாளர்களின் வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது, அதே நேரத்தில் தேர்தல் தொடர்பான உள்ளடக்கத்தைக் கண்டறிந்து மதிப்பிடுவதை உண்மைச் சரிபார்ப்பவர்களுக்கு எளிதாக்குகிறது. உண்மைச் சரிபார்ப்பவர்கள் தவறான தகவலை மதிப்பிடுவதை எளிதாக்க, முக்கிய வார்த்தை கண்டறிதலைப் பயன்படுத்தும் என்று மெட்டா கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.