Long Term Annual Plans from Tata Sky, Dish TV and D2H : இந்திய தொலைத் தொடர்பு ஆணையம் ஏற்படுத்திய புதிய கேபிள் டிவி கொள்கை பரவலாக்கப்படும் முயற்சியில் அனைத்து டிடிஎச் நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன.
ஏற்கனவே நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸை நீக்கி அறிவித்த நிலையில் தற்போது மூன்று மாதம், ஆறு மாதம் மற்றும் ஒரு வருட பேக்குகளை அறிமுகம் செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்த சந்தா முறைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத சந்தாவை இலவசமாக வழங்கவும் முடிவு எடுத்துள்ளது. டாட்டா ஸ்கை நிறுவனம் வழங்கும் ஃபிளெக்ஸி ஆனுவல் ப்ளான் ( Flexi Annual Plan ) மூலமாக ஒரு மாத சந்தா வரை இலவசமாக சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.
Dish TV Long Term Annual Plans
டாட்டா ஸ்கையை தொடர்ந்து டிஷ் டிவியும் சில அதிரடி ஆஃபர்களை வழங்கத் துவங்கியுள்ளது. 3 மாத சந்தாக்களை வாங்குபவர்களுக்கு 7 நாட்கள் இலவசமாகவும், 6 மாத சந்தாதாரர்களுக்கு 15 நாட்கள் இலவசமாகவும், ஒரு வருட ப்ளானிற்கு ஒரு மாத இலவச சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
11 மாத ப்ளான்கள் பெறுபவர்களுக்கு 1 மாத சந்தா இலவசமாகவும், ஒரு இலவச சர்வீஸ் விசிட்டும் வழங்குகிறது டிஷ் டிவி.
D2H long term Annual Plans
D2H சேவையும் கிட்டத்தட்ட டிஷ் டிவி தரும் அதே ஆஃபர்களை தருகிறது. மேலும் 22 மாத சந்தாக்களை பெறும் நபர்களுக்கு 60 நாட்கள் இலவச சப்ஸ்கிரிப்சனும், 33 மாதங்களுக்கு - 90 நாட்கள், 44 மாதங்களுக்கு 120 நாட்கள், 55 மாதங்களுக்கு 150 நாட்கள் என இலவச ப்ளான்களை தயாராக வைத்துள்ளது.
Tata Sky long term Annual Plans
டாட்டா ஸ்கை ஃபிளெக்ஸி ஆனுவல் ப்ளான் என்ற ப்ளான் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதன் மூலம் ஒரு மாத சந்தாவை இலவசமாக வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.
மேலும் படிக்க : மோடியின் ஒவ்வொரு அசைவையும் நேரலையில் காண ‘நமோ’ டிவி!