Longest Lunar Eclipse: இந்த நூற்றாண்டின் அதியசமான மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது . ஆம். வருகின்ற ஜூலை 27ம் நள்ளிரவில் இந்த வருடத்தின் மிக நீளமான சந்திரகிரகணம் நடைபெற உள்ளது.
Blue Moon, Black Moon, Blood Moon, மற்றும் Super Moon பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
இந்த அதிசய நிகழ்வோடு மற்றொரு அதிசய நிகழ்வும் நடைபெற இருக்கிறது. அது என்னவென்றால் ப்ளட் மூன். அதாவது சூரியனுக்கும் நிலவிற்கும் நடுவில் புவி பயணிக்கும். அந்த சமயத்தில் பூமியின் நிழலானது நிலவில் விழுந்து, நிலா பார்ப்பதற்கு அதிக சிவப்புடன் காணப்படும்.
இந்தியாவில் இந்நிகழ்வு இரவு 11.54 மணி அளவில் தொடங்கும் என்றும், இந்த அதிசய நிகழ்வினை வெறும் கண்களால் பார்க்க இயலும். மேலும் இந்தியா முழுவதும் இந்த சந்திரகிரகணத்தினை பார்க்க இயலும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா மட்டுமில்லாமல் ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்காவிலும் இந்நிகழ்வினை காணலாம்.
இந்த சந்திர கிரகணம் சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் இது பற்றிய பல சுவாரசியமான தகவல்களை படிக்க
செவ்வாய் கிரகம் ஜூலை 31ம் தேதி பூமிக்கு வெகு அருகில் பயணிக்க இருக்கிறது. இந்நிகழ்வும் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மிக அறிய நிகழ்வாகும்.