ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். ஷாப்பிங் முதல் வங்கி பணப் பரிவர்த்தனை வரை அனைத்துப் பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டையில் பெயர், புகைப்படம், பிரத்யேக எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் எதிர்பாராத விதமாக உங்கள் ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் டென்ஷன் ஆக வேண்டாம். அதே எண்ணுடன் புதிய ஆதார் அட்டை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். ஆன்லைன்/ ஆஃப்லைன் முறையில் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் UIDAI இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆதார் எண்/ பதிவு ஐடி/ ஆதார் விர்சுவல் ஐடி/ மொபைல் எண்/ இமெயில் கொண்டு விண்ணப்பித்து புதிய அட்டை பெறலாம்.
ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது?
ஆதார் அட்டைதாரர்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து UIDAI-இன் கட்டணமில்லா எண்ணான 1800-180-1947 அல்லது 1947-ஐ தொடர்பு கொண்டு புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
IVR பதிலைத் தொடர்ந்து உங்கள் அழைப்பு ஆதார் நிர்வாகிக்கு மாற்றி விடப்படும். அவர்களிடம் ஆதார் தொடர்பான பிரச்சனையைத் தெரிவித்து புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதைத் தவிர UIDAI சாட்போட் மூலம் விண்ணப்பிக்கலாம்
UIDAI சாட்போட் ஆதார் மித்ரா-வைத் தொடர்பு கொண்டு eAadhaar டவுன்லோடு செய்யலாம் அல்லது PVC கார்டு ஆர்டர் செய்யலாம். இதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
இ-ஆதார்/ ஆதார் பி.வி.சி பெறுவது எப்படி?
உங்கள் ஆதார் எண் நினைவு இருந்தால் அல்லது ஆதார் ஜெராக்ஸ் இருந்தால் அதைப் பயன்படுத்தி இ-ஆதார் பெறலாம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செயலியான mAadhaar செயலி மூலம் ஆதார் எண் பயன்படுத்தி நேரடியாக இ-ஆதார் பெறலாம். The password-protected எலக்ட்ரானிக் காபி ஆதார், டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆதார் வழங்கப்படும். மேலும் ஆதார் பி.வி.சி பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“