சந்திர ரோவிங் வாகனம் என்பது அப்பல்லோ 15, 16 மற்றும் 17 பயணங்களில் விண்வெளி வீரர்களால் நிலவில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனமாகும். இது "மூன் பஷி" (Moon buggy) என்று செல்லப் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் லூனார் டெரெய்ன் வெஹிக்கிள்கான(எல்.டி.வி)தொழில் நுட்பங்களை உருவாக்க, Intuitive Machines, சந்திர அவுட்போஸ்ட் மற்றும் வென்டூரி ஆஸ்ட்ரோலாப் ஆகிய மூன்று நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக நாசா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தின் இயக்குனர் வனேசா வைச் கூறுகையில், "நிலவில் நாம் கற்றுக் கொள்வதை முன்னேற்றுவதற்கு உதவும் ஆர்ட்டெமிஸ் சந்திர ஆய்வு வாகனத்தின் வளர்ச்சியை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இந்த வாகனம் நமது விண்வெளி வீரர்களின் சந்திர மேற்பரப்பில் அறிவியலை ஆராய்ந்து நடத்தும் திறனை பெரிதும் அதிகரிக்கும். அதே வேளையில் குழுக்கள் பணிகளுக்கு இடையே அறிவியல் தளமாகவும் செயல்படும்,” என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/nasa-moon-buggy-artemis-missions-9250743/
ஆர்ட்டெமிஸ் 5 பணியில் எல்.டி.வியைப் பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. மேலும் அது சந்திரனின் தென் துருவத்தில் உள்ள தீவிர நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளது. தன்னாட்சி வாகனம் ஓட்டுவதற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளுடன் சக்தி மேலாண்மை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
NASA ஆனது LTV-ஐ தொழில்துறையிலிருந்து ஒரு சேவையாக வாங்கும். இது "காலவரையற்ற விநியோகம்/காலவரையற்ற அளவு", மைல்ஸ்டோன் அடிப்படையிலான LTV சேவைகள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. நாசா இதற்காக ஒப்பந்த அடிப்படையில் $4.6 பில்லியன் டாலர்கள் வரை செலவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“