120 இன்ச் திரை, HD தரம்... ரூ.19,999 முதல் லுமியோ ஆர்ச் ப்ரொஜெக்டர்கள் அறிமுகம்!

லுமியோ நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ப்ரொஜெக்டர்களான ஆர்ச் 5 (Arc 5), ஆர்ச் 7 (Arc 7) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், கூகுள் டிவி (Google TV), நெட்ஃபிக்ஸ் (Netflix) செயலிக்கு ஆதரவு உள்ளதுதான்.

லுமியோ நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ப்ரொஜெக்டர்களான ஆர்ச் 5 (Arc 5), ஆர்ச் 7 (Arc 7) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், கூகுள் டிவி (Google TV), நெட்ஃபிக்ஸ் (Netflix) செயலிக்கு ஆதரவு உள்ளதுதான்.

author-image
WebDesk
New Update
Lumio Arc 5

120 இன்ச் திரை, HD தரம்... ரூ.19,999 முதல் லுமியோ ப்ரொஜெக்டர்கள் அறிமுகம்!

லுமியோ நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ப்ரொஜெக்டர்களான ஆர்ச் 5 (Arc 5), ஆர்ச் 7 (Arc 7) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் Vision 7, Vision 9 ஸ்மார்ட் டிவிகளை வெளியிட்ட லுமியோ, இப்போது பெரிய திரையில் பொழுதுபோக்கிற்கான புதிய வழியை வழங்குகிறது. இந்த ப்ரொஜெக்டர்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், கூகுள் டிவி (Google TV), நெட்ஃபிக்ஸ் (Netflix) செயலிக்கு ஆதரவு உள்ளதுதான்.

Advertisment

சிறப்பு அம்சங்கள்:

இந்த 2 ப்ரொஜெக்டர்களும் LED தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. மேலும், முழு HD தரத்தில் (1080p) வீடியோக்களைக் காட்டுகின்றன. ஆர்ச் 5 ப்ரொஜெக்டர் 100 இன்ச் வரை படத்தை ஒளிபரப்பும். ஆர்ச் 7 ப்ரொஜெக்டர் அதைவிடப் பெரியதாக 120 இன்ச் திரை வரை ஆதரிக்கும். ஆர்ச் 5 ஆனது 200 ANSI லூமன்ஸ் பிரகாசத்தைக் கொண்டிருக்கும். ஆர்ச் 7 அதைவிட இரட்டிப்பாக, 400 ANSI லூமன்ஸ் பிரகாசத்தை வழங்கும். இதனால் ஆர்ச் 7 இன்னும் பிரகாசமான பட அனுபவத்தைத் தரும்.

ஆர்ச் 5-ல் ஒரு 5W ஸ்பீக்கர் உள்ளது. ஆர்ச் 7-ல் இரண்டு 8W ஸ்பீக்கர்கள் இருப்பதால், சிறந்த ஒலி அனுபவம் கிடைக்கும். 2 மாடல்களும் லுமியோ 'ஆர்ச் லைட் இன்ஜின்' மூலம் செயல்படுகின்றன. இவை முழுமையாக சீல் செய்யப்பட்டு, தூசு உள்ளே நுழையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளன.

Advertisment
Advertisements

கூகுள் டிவி மற்றும் நெட்ஃபிக்ஸ் மட்டுமின்றி, மற்ற முக்கிய OTT செயலிகளையும் இவை ஆதரிப்பதாக லுமியோ கூறுகிறது. மேலும், ஸ்மூத் ட்ரெபசாய்டல் ரீகாளிப்ரேஷன், ஆட்டோ-கீஸ்டோன் திருத்தம், தடை தவிர்ப்பு (obstacle avoidance) மற்றும் உடனடி ஆட்டோஃபோகஸ் போன்ற ஸ்மார்ட் அம்சங்களும் இதில் உள்ளன. இவை MediaTek MT9630 ப்ராசஸர், 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வருகின்றன. 16:9 அஸ்பெக்ட் ரேஷியோ, 41.9% DCI-P3 கவரேஜ் மற்றும் HDR10 ஆதரவையும் கொண்டுள்ளன.

ப்ளூடூத் 5.1, வைஃபை 5 (2.4GHz மற்றும் 5GHz), HDMI 1.5 மற்றும் 2.0 (டால்பி பாஸ்-த்ரூவுடன்), மற்றும் USB 2.0 போன்ற பல இணைப்பு வசதிகளையும் இவை கொண்டுள்ளன.

லுமியோ ஆர்ச் 5 விலை ரூ.19,999. இது ஜூலை கடைசி வாரத்தில் அமேசானில் விற்பனைக்கு வரும். லுமியோ ஆர்ச் 7 விலை ரூ.34,999. இந்த சலுகை காலத்தில், கார்டு தள்ளுபடிகளுடன் சேர்த்து ரூ.29,999க்கு வாங்கலாம். லுமியோ நிறுவனம் இந்தியா முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சேவை மையங்களைக் கொண்டிருப்பதால், வாடிக்கையாளர் சேவைக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது. இந்தப் புதிய ப்ரொஜெக்டர்கள் வீட்டிலேயே சினிமா போன்ற அனுபவத்தை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: