Lunar Eclipse News In Tamil: புறநிழல் சந்திர கிரகணம் நாளை (ஞாயிறு) காலை காலை 8.37க்கு துவங்கி 11.22 மணிக்கு முடிவடையும் என்று நாசா தெரிவித்தது. கிட்டதட்ட 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு இந்த கிரகணம் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு கிரகணம் இந்திய நேரப்படி நாளை காலை 9.59 மணிக்கு நடக்கும். இது, இந்த ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகணமாகும்.
Advertisment
பூமியின் நிழல் பகுதிக்குள் முழுமையாகத் தெரியும் சந்திரன் வரும் போது அதன் மீது சூரிய ஒளி விழாமையால் சந்திரன் நமது கண்களுக்கு தெரிவிதில்லை. அதனை நாம் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம்.
Source: Rice university
எனவே, இந்திய நேரப்படி காலை நேரத்தில் கிரகண நிகழ்வு ஏற்படுவதால், இந்தியாவில் இதை பார்க்க முடியாது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சில நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தை நேரடியாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
புறநிழல் சந்திர கிரகணம்:
புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இருவேறு பகுதிகளாக ஆய்வலார்கள் பிரிக்கின்றனர்.
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருக்கும்போது சந்திரன் புவியின் கருநிழல் மையத்தில் மறைக்கப்படும்.
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இல்லாதபோது, பூமியின் நிழலின் வெளிபகுதியான பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழுவதை புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil