Lunar Eclipse January 2020 : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. கடந்த டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தை நிரைய பேர் சரியான பாதுகாப்புடன் கண்ணாடி அணிந்து பார்த்திருப்பீர்கள். ஆனால் மேக மூட்டமாக இருந்தால் இன்று நடைபெறும் நான்கு மணி நேர சந்திரகிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம். இந்த சந்திர கிரகணத்தை பொதுவாக ”வொல்ஃப் மூன் எக்ளிப்ஸ்” என்று அழைப்பார்கள். இது போன்று இந்த வருடத்தில் மேலும் மூன்று சந்திர கிரகணங்கள் நடைப்பெறவிருக்கிறது.
Advertisment
சந்திர கிரகணத்தை அறிவியல் முறையில் பெனும்ப்ரல் லூனார் எக்ளிப்ஸ் (penumbral lunar eclipse) என்று அழைப்பார்கள். இந்த நிகழ்வின் போது சந்திரன் முழுவதும் இருளால் மூழ்கப்படுவதோ, அல்லது பளீர் சிவப்பு நிறத்திலோ ஆவதில்லை. இந்த வகை கிரகணங்கள் இந்த வருடத்தில் மொத்தம் நான்கு முறை நடைபெற உள்ளது. சந்திரகிரகணம் என்பது முழு நிலவு பௌர்ணமி நாளின் போது, பூமியின் நிழலில் பயணிக்கும் போது தோன்றும். முழு சந்திரகிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் முழுமையாக சந்திரனை ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரியும்.
பாதி சந்திரகிரகணம் என்பது பூமியின் உட்புற நிழல் நிலவின் ஒரு பகுதியை மறைக்கும் நிகழ்வாகும். ஆனால் இந்த சந்திரகிரகணம் என்பது பூமியின் புறநிழல் (Penumbra) நிலவின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் நிகழ்வாகும். இந்த நிகழ்வில் நிலவு பூமியின் உட்புற நிழல் வரை பயணிக்காது.
Advertisment
Advertisements
இந்த சந்திர கிரகணம் இந்தியா மற்றும் இதர ஆசிய நாடுகளில் தெரியும். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணத்தை மக்கள் பார்க்க இயலும். இந்த சந்திர கிரகணம் இரவு 10:30 மணிக்கு துவங்கி காலை 12:40 மணிக்கு உச்சத்தை அடைகிறது. பின்பு இந்த சந்திர கிரகணம் 11ம் தேதி காலை 02:40 க்கு நிறைவடைகிறது. இதனை வெறும் கண்களாலே மக்கள் பார்க்க இயலும்.