உலக மக்களுக்கு உற்சாகம் தந்த சந்திர கிரகணம்

Watch Lunar Eclipse 2020 Live : பூமியின் நிழல் பகுதிக்குள் முழுமையாகத் தெரியும் சந்திரன் வரும் போது அதன் மீது சூரிய ஒளி விழாமையால் சந்திரன் நமது கண்களுக்கு தெரிவிதில்லை. அதனை நாம் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம்.

Chandra Grahanam Today in India Live Updates : புறநிழல் சந்திர கிரகணம் இன்று காலை 8.37 மணிக்கு துவங்கி 11.22 மணிக்கு முடிவடைகிறது.  அதிகபட்ச அளவு கிரகணம் இந்திய நேரப்படி இன்று காலை 9.59 மணிக்கு நடக்கும்.

சந்திர கிரகண நிகழ்வை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இன்றைய சந்திர கிரகணம், கிட்டத்தட்ட 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகணமாகும்.

பூமியின் நிழல் பகுதிக்குள் முழுமையாகத் தெரியும் சந்திரன் வரும் போது அதன் மீது சூரிய ஒளி விழாமையால் சந்திரன் நமது கண்களுக்கு தெரிவிதில்லை. அதனை நாம் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Lunar Eclipse 2020 Live Updates : சந்திர கிரகணம் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.


16:00 (IST)05 Jul 2020

ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகணம் – வைரல் புகைப்படம்

15:57 (IST)05 Jul 2020

பட்டாசு வெடித்து கொண்டாட முடிவு செய்ததது மகிழ்ச்சியாக உள்ளது – சந்திர கிரகணம்

மக்கள் அனைவரும் முழு நிலவையும், சந்திர கிரகணத்தையும் பட்டாசு வெடித்து கொண்டாட முடிவு செய்ததது மகிழ்ச்சியாக உள்ளது என்று ட்விட்டரில் ஒருவர் பதிவு செய்தார்.

15:20 (IST)05 Jul 2020

அமெரிக்க மக்களுக்கு உற்சாகம் தந்த சந்திர கிரகண நிகழ்வு

13:43 (IST)05 Jul 2020

2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகள் நீடித்த சந்திர கிரகணம்

2020ம் ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகண நிகழ்வு நிறைவடைந்தது.  இன்றைய சந்திர கிரகண நிகழ்வு 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகள் நீடித்ததாக ஆய்வளார்கள் தெரிவிக்கின்றனர்.  வரும்  நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அடுத்த சந்திர கிரகண நிகழ்வு நடக்கும்  என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

12:43 (IST)05 Jul 2020

பல நாடுகளில் சந்திரகிரகணம் தெரிந்தது- வைரல் புகைப்படங்கள்

12:41 (IST)05 Jul 2020

பல நாடுகளில் சந்திரகிரகணம் தெரிந்தது- வைரல் புகைப்படங்கள்

11:59 (IST)05 Jul 2020

சந்திர கிரகணம் வைரல் படங்கள்-

என்ன ஒரு அழகான நிலா! இன்று தெரியும் முழு நிலா மற்றும் புறநிலை சந்திர கிரகணத்தை பார்க்க எனது டெலஸ்கோப்பை எடுத்து வந்தேன் என்று ஒரு ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவு செய்தார்.

11:35 (IST)05 Jul 2020

வாஷிங்டன் Mt.Baker மலையில் இருந்து தோன்றிய முழு நிலா:

10:38 (IST)05 Jul 2020

இன்று முழுநிலவு மற்றும் புறநிலை சந்திர கிரகணம் உணரப்படுகிறது.

10:34 (IST)05 Jul 2020

சந்திர கிரகணம் அரிய புகைப்படங்கள்

10:10 (IST)05 Jul 2020

கடந்த ஜூன் 21ம் தேதி நடந்தது என்ன?

கடந்த ஜூன 21-ஆம் தேதியன்று வருடாந்திர சூரியகிரணம் நிகழ்ந்தது . அதிகபட்சமாக, சென்னையில் இந்த கிரகணம் 34 விழுக்காடு அளவுக்கு தெரிந்தது.  அன்று, சந்திரனின் வெளிப்புற அளவு சூரியனை விட 1 சதவீதம் சிறியதாக இருந்ததால், சூரியன் கடிக்கப்பட்ட ஆப்பிள் வடிவத்தில் தெரிந்தது. மேலும், சூரியனின் ஒரு சிறிய பகுதி, சந்திரனின் வட்டால் மறைக்கப்பட்டிருந்தது. முழு சூரியனையும் சந்திரனால் மறைக்க முடியாததால்,  சந்திரனைச்சுற்றி சூரிய ஒளியின் பிரகாசமான  வட்டம் காணப்பட்டது. இதன் காரணத்தால், இந்த சூரிய கிரகணம் ‘’ அனல் வட்டம்’’ எனக் கூறப்பட்டது.

மேலும், விவரங்களுக்கு: சூரிய கிரகணம் ஹைலைட்ஸ்: தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

09:54 (IST)05 Jul 2020

புறநிலை சந்திர கிரகணம் என்றால் என்ன?

புறநிழல் சந்திர கிரகணம்:

புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இருவேறு பகுதிகளாக ஆய்வலார்கள் பிரிக்கின்றனர்.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருக்கும்போது சந்திரன் புவியின் கருநிழல் மையத்தில் மறைக்கப்படும்.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இல்லாதபோது, பூமியின் நிழலின் வெளிபகுதியான பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழுவதை புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இருவேறு பகுதிகளாக ஆய்வலார்கள் பிரிக்கின்றனர்.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருக்கும்போது சந்திரன் புவியின் கருநிழல் மையத்தில் மறைக்கப்படும்.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இல்லாதபோது, பூமியின் நிழலின் வெளிபகுதியான பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழுவதை புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

09:49 (IST)05 Jul 2020

அடுத்த சந்திர கிரகணம் எப்போது?

2020ம் ஆண்டில் ஒரே ஒரு சந்திர கிரகண நிகழ்வு மட்டும் எஞ்சியுள்ளது. இது வரும்  நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

2020 ஆம் ஆண்டில், அனைத்தும் புறநிழல் சந்திர கிரகணங்கள் தான்.  

09:42 (IST)05 Jul 2020

பல நாடுகளில் தென்பட ஆரம்பித்த சந்திர கிரகணம்:

09:35 (IST)05 Jul 2020

எந்த நாடுகளில் இன்றைய சந்திர கிரகணம் தெரியும்?

இந்திய நேரப்படி காலை நேரத்தில் கிரகண நிகழ்வு ஏற்படுவதால், இந்தியாவில் இதை பார்க்க முடியாது.   இந்த ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சில நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தை நேரடியாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

09:31 (IST)05 Jul 2020

சந்திர கிரகணம்: எங்கு, எப்போது, எப்படி பார்க்கலாம்?

இன்று காலை 8.37 மணிக்கு துவங்கிய கிரகண நிகழ்வு, சரியாக 11.22 மணிக்கு முடிவடைகிறது. அதவாது, கிட்டத்தட்ட  2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு நிகழும். அதிகபட்ச அளவு கிரகணம் இந்திய நேரப்படி இன்று காலை 9.59 மணிக்கு நடக்கும் என்று கணிக்கப்படுகிறது.   

Lunar Eclipse 2020 Live Updates : இந்த ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள்,  ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சில நாடுகள் மற்றும்  பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தை நேரடியாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்திய நேரப்படி காலை  நேரத்தில் கிரகண நிகழ்வு ஏற்படுவதால், இந்தியாவில் இதை பார்க்க முடியாது.

 

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lunar eclipse 2020 live updates lunar eclipse chandra grahanam tamil lunar eclipse july 2020 timings

Next Story
சந்திர கிரகணம்: எங்கு, எப்போது, எப்படி பார்க்கலாம்?Lunar Eclipse 2020 Date, Time:
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com