இந்தியாவில் சந்திர கிரகணம்: யூடியூப்-ல் லைவ் பார்ப்பது எப்படி?
Lunar Eclipse 2023: இந்தியாவில் நாளை அதிகாலை பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகணம் எப்போதும் முழு நிலவு நாளில் நிகழும். நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் மறையும்போது பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
அக்டோபர் 29-ம் தேதி அரிய பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது இந்தியாவில் நிகழக் கூடிய கிரகணமாகும். சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 28-29) அதிகாலையில் இடைப்பட்ட நேரத்தில் நிகழும் ஒரு பகுதி சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் காண முடியும்.
Advertisment
சனிக்கிழமை நள்ளிரவில் நிலவு பெனும்பிராவில் நுழையும் என்றாலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தான் அம்ப்ரல் கட்டத்தில் தான் (umbral phase) கிரகணத்தை முழுமையாக காண முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார். இந்தியாவில் நிகழும் இந்த பகுதி சந்திர கிரகணம் நாளை (அக்.29) அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.24 மணிக்கு முடிவடையும். சுமார் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் கிரகணம் நிகழ உள்ளது. கிரகணத்தையொட்டி இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்கள் திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் நடை சாத்தப்படுகிறது.
சூரிய கிரகணம் போலல்லாமல், சந்திர கிரகணங்களை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் நேரடியாக பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம். அதோடு சமூக வலைதளங்களிலும் கிரகண நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
'Time and Date' என்ற யூடியூப் பக்கத்தில் பகுதி சந்திர கிரகண நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த பக்கத்தில் நிகழ்ச்சியை காணலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“