Advertisment

இன்று சந்திர கிரகணம்: ஸ்மார்ட் போனில் அழகாக போட்டோ எடுக்க நாசாவின் 9 டிப்ஸ்

Lunar Eclipse 2023 on October 28-29: இந்தியாவில் இன்று (அக்டோபர் 28-29) நள்ளிரவில் பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது ஒரு அரிய கிரகணம் ஆகும். அடுத்து இந்தியாவில் 2025-ல் தான் கிரகணம் நிகழும்.

author-image
WebDesk
New Update
Lunar Eclipse.jpg

Partial lunar eclipse on October 29:  அக்டோபர் 29-ம் தேதி அரிய பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது இந்தியாவில் நிகழக் கூடிய கிரகணமாகும். சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 28-29) அதிகாலையில் இடைப்பட்ட நேரத்தில்  நிகழும் ஒரு பகுதி சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் காண முடியும்.  

Advertisment

சனிக்கிழமை நள்ளிரவில் நிலவு பெனும்பிராவில் நுழையும் என்றாலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தான் அம்ப்ரல் பேஃஸ் (umbral phase) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அதிகாலை 1.05 மணி முதல் 2.24 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. கிரகணத்தின் அழகான காட்சிகளை பெரும்பாலும் தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் தான் காண்கிறோம். நாசா, இஸ்ரோ போன்ற விண்வெளி நிறுவனங்கள் வெளியிடும் படத்தை தான் காண்கிறோம். 

Professional cameras மற்றும் தொலைநோக்கியில் எடுக்கப்படும் புகைப்படங்களை தான் காண்கிறோம். ஆனால் அமெரிக்காவின் நாசா (நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) சில சமயங்களில் சாமானியர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் புகைப்படங்களையும் பயன்படுத்துவதாக கூறியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இன்று தெரியும் பகுதி சந்திர கிரகணத்தை  நம்மிடம் உள்ள ஸ்மார்ட்போன்களிலேயே அழகாக படம் எடுக்க நாசா பகிரும் 9 சிம்பிள் டிப்ஸ் குறித்து இங்கு பார்ப்போம். 

முதலில் முழு நிலவு புகைப்படும் 

கிரகணத்திற்கு முன் முதலில் முழு நிலவை  புகைப்படம் எடுங்கள். முழு நிலவை புகைப்படம் எடுப்பதைப் பயிற்சி செய்யுங்கள். சந்திர கிரகணம் எப்போதும் முழு நிலவு (பௌர்ணமி) நாளில் தான் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  எனவே, உங்கள் மூன் போட்டோகிராபி திறமையை ஸ்மார்ட்போனில் வெளிப்படுத்த முழு நிலவை படம் எடுத்துக் பழகுங்கள்.  இது சற்று சவாலாக இருக்கும்.  Exposure கிடைக்காது. அதனால், பெரும்பாலான  ஸ்மார்ட் போன்களில் ஃபோகஸ் மற்றும் மீட்டரிங் ஸ்பாட்கள் இருக்கும் இடத்தை டச் செய்து அட்ஜஸ்ட் செய்து படம் எடுக்கலாம். 

ஆட்டோ-ஃபோகஸ் வேண்டாம் 

மொபைலில் ஆட்டோ-ஃபோகஸைப் பயன்படுத்தி படம் எடுக்க வேண்டாம். Manual.-ஆக உங்கள் ஸ்கிரீனில் விரல் வைத்து ஃபோகஸ் செட் செய்து படம் எடுங்கள்.

ஐபோனில் எக்ஸ்போஷர் ஸ்லைடர் 

ஐபோன்களில் எக்ஸ்போஷர் ஸ்லைடர் ஆப்ஷன் பயன்படுத்தி போட்டோ எடுக்கவும். ஐபோன் கேமரா ஆப் ஓபன் செய்து புகைப்படம் எடுக்கும் பொருள் மீது விரல் வைத்து ஃபோகஸ் செய்தால் பாக்ஸ் வரும். சிறிய சூரிய ஐகான் காண்பிக்கும். இது தான் எக்ஸ்போஷர் ஸ்லைடர்.  நிலவு படத்தில் விவரங்களைப் பார்க்கும் வரை அதை கீழே இழுக்கவும். இப்போது படம் கிளிக் செய்யவும்.

ஆண்ட்ராய்டிலும் எக்ஸ்போஷர் ஸ்லைடர் 

ஆண்ட்ராய்டிலும் எக்ஸ்போஷர் ஸ்லைடர் ஆப்ஷன் இருக்கும், அதிலும் இதே போன்று வழிமுறைகளைச் செய்யவும். 

டிஜிட்டல் ஜூம் வேண்டாம் 

தெளிவான படம் உருவாக்க டிஜிட்டல் ஜூம் பயன்படாது.  தேவைப்பட்டால் ஆன்லைனில் ஜூம் லென்ஸ் இணைப்பு வாங்கி பயன்படுத்தலாம். ஆஃப்லைன் கடைகளில் 12x முதல் 18x வரை கிடைக்கும். இதில்  முழு கிரகணமும் அழகாக படம் எடுக்க முடியும். 

5 விநாடி டிலே டைமர் 

எக்ஸ்போஷர் ஆன் செய்து 5 விநாடி டிலே டைமர் ஆப்ஷன் பயன்படுத்தவும்.  ஷாட் எடுப்பதற்கு முன் கேமரா 5 வினாடிகள் காத்திருக்கும். இது உங்கள் கேமரா/ட்ரைபாட்/கிளாம்ப் சிஸ்டம் அனைத்தையும் சரி செய்து தெளிவான படத்தை எடுத்துக் கொடுக்கும். 

Zoom out for a wide-angle view 

உங்கள் ஸ்மார்ட்போனில் டெலிஃபோட்டோ இணைப்பு இல்லாமல், படம் எடுக்கும் போது அதிக அளவில் பிக்சலேட்டாக இருக்கும், மேலும் கரோனா சமமாக கடினமானதாக இருக்கும்.  இது ஒரு நிலையான ஸ்மார்ட்போனின் சாதாரண கேமராக் காட்சியாகும், ஆனால் நீங்கள் ஒரு பரந்த கோணத்தில் பெரிதாக்கினால், வானத்தில் ஒரு கரும்புள்ளியைச் சுற்றியுள்ள பிரகாசமான கொரோனாவைக் காண முடியும், 

Tripod பயன்பாடு 

டெலிஃபோட்டோ இமேஜரிக்கு Tripod பயன்படுத்தலாம். Tripod பயன்படுத்தும் போது ஷேக் எதுவும் இல்லாமல் தெளிவான, நிலையான படத்தை எடுக்க முடியும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



 

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment