Lunar Eclipse Date and Time in India Tamil News : 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 30, திங்கள் அன்று நிகழவிருக்கிறது. இந்த ஆண்டு, சந்திர கிரகணம் கார்த்திக் பூர்ணிமாவுடன் சேர்ந்து நிகழவுள்ளது. பூமி, சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் வந்து சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான, வெளிப்புற பகுதி வழியாக நகர்வதனால் முன்பைப் போலவே, இதுவும் பெனும்பிரல் சந்திர கிரகணமாகவும் இருக்கும்.
இந்தியாவில், இந்த நிகழ்வு மதியம் 1:04 மணிக்குத் தொடங்கி மாலை 5:22 மணிக்கு முடிவடையும். மாலை 3:13 மணியளவில் சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும். முந்தைய சந்திர கிரகணத்தைப் போலவே, அடிவானத்திற்குக் கீழே இருப்பதால் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. வரவிருக்கும் சந்திர கிரகணத்தின் காலம், முந்தைய நேரம் இரண்டு மணி நேரம் 45 நிமிடங்களை விட நீண்டு காணக்கூடியதாக இருக்கும்.
ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் மற்றும் அட்லான்டிக் ஆகியவற்றின் பல பகுதிகள் 2020-ம் ஆண்டின் இறுதி பெனும்பிரல் சந்திர கிரகணத்தைக் காணும் என Timeanddate.com தெரிவிக்கிறது. மேலும் இது, தெரிவுநிலை வானிலை நிலையைப் பொறுத்தது. இந்த நிலை மேகமூட்டமாகவும், பனிமூட்டமாகவும் இருந்தால், ஸ்கைகேஜர்கள் இந்த நிகழ்வைக் காண முடியாது.
2020-ம் ஆண்டில், ஜனவரி 10, ஜூன் 5 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த மூன்று சந்திர கிரகணங்களை நாம் கண்டிருக்கிறோம். இந்த ஆண்டு மொத்த அல்லது பாதி சந்திர கிரகணங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மொத்தம் ஆறு கிரகணங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நவம்பர் 30-க்குப் பிறகு, ஒரேயொரு கிரகணம் மட்டுமே இருக்கும். இரண்டு வாரங்கள் கழித்து டிசம்பர் 14 அன்று சூரிய கிரகணம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"