ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி?
Today Moon Eclipse : கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும்
Today Moon Eclipse : கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும்
lunar eclipse, lunar eclipse 2020, today moon eclipse timing in india, today moon eclipse, when is lunar eclipse in 2020, lunar eclipse june 2020 time in india, lunar eclipse 2020 in india date and time, lunar eclipse tamil news, lunar eclipse news in tamil, lunar eclipse latest tamil news, lunar eclipse tamil nadu news
Lunar Eclipse 2020 Tamil News : 2020ம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று இரவு 11.54 மணி முதல் ஜூன் 6ம் தேதி அதிகாலை 2.34 மணி என 3 மணிநேரம் 18 நிமிடங்கள் நிகழ உள்ளது. அதிகாலை 12.54 மணியளவில் முழு சந்திர கிரகணம் நிகழும் என்று இந்த சந்திர கிரகணம் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் நிலா தோன்றும் என்பதால், இதை ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் என்றும் அழைக்கிறோம்.
Advertisment
ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்காவின் பலபகுதிகள், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக், பசிபிக், அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் இது தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய ஒளியை நிலவின் மீது படாமல், பூமியை மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும்.
Advertisment
Advertisements
இன்று நிகழும் சந்திர கிரணகணம் பெனும்ரா சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த கிரகணத்தின் போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும்.
Slooh and Virtual Telescope உள்ளிட்ட யூடியூப் சேனல்களிலும், சந்திரகிரகணம், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகண நிகழ்வு மற்றும் அதுகுறித்த தகவல்களை தெரிந்துகொள்ள , நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் indianexpress.com இணையதளம் உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
இந்த கிரகணகத்தை தொடர்ந்து, இம்மாதம் 21ம் தேதி சூரிய கிரகணமும், ஜூலை 4 மற்றும் 5ம் தேதிகளில் சந்திர கிரகணமும் நிகழ உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil