ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று (ஆக.7) காலை 9.18 மணியளவில் விண்ணில் சீறிப் பாய்ந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததாக முதலில் அறியப்பட்டது.
எனினும் நீட்வட்ட பாதையில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்த முடியவில்லை. சில விநாடிகளில் ராக்கெட்டும் சிக்னல் கிடைக்கவில்லை. பொதுவாக இஸ்ரோ இதுவரை அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளை மட்டுமே விண்ணில் செலுத்திவந்தது.
இந்த நிலையில் முதல் முறையாக எடை குறைந்த ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியது. அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த எடை குறைந்த ராக்கெட் 75 மாணவிகள் கொண்ட குழு தயாரித்தது ஆகும்.
145 கிலோ கொண்ட இந்த ராக்கெட்டுகள் பூமியை கண்காணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் தரப்பில் வெளியான அறிக்கையில், ‘ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையிலும், நீள்வட்ட பாதையில் நிலைநிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து ராக்கெட்டில் இருந்து சிக்னல் வரவில்லை. இதனால் தொடர்ந்து முயற்சித்து பார்த்தோம். எனினும் சிக்னல் 47 நிமிடங்கள் வரை கிடைக்கவில்லை. .இது தொடர்பாக ஆய்வறிக்கை அளிக்க கேட்டுள்ளோம். அந்த அறிக்கைகளின் பரிந்துரையின் பேரில் எஸ்எஸ்எல்வி மீண்டுவரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்வி ராக்கெட் முதல் மூன்று நிலைகள் சிறப்பாக செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“