சிலிண்டர் விலை உயர்வு முதல் ஆர்.டி.ஆர் ஃபைலிங் வரை இந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் பல்வேறு முக்கிய அப்டேட்கள் வந்துள்ளன. அது பற்றி பார்ப்போம். ஆதார் Demographic தரவுகளை அப்டேட் செய்ய டிசம்பர் 14-ம் தேதி கடைசி நாளாகும். டிசம்பர் 14 வரை கட்டணம் ஏதும் இல்லாமல் ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள முடியும்.
அடுத்ததாக பான்- ஆதார் கார்டை இணைக்க டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாளாகும். அடுத்த முக்கிய தகவலாக எந்த சிம் கார்டு பயன்படுத்துபவராக இருந்தாலும் நமக்கு வருகிற எஸ்.எம்.எஸ் செய்திகளை டிராய் வெரிஃபை செய்து அது உண்மையான நிறுவன செய்தியா என்பதை கண்காணிப்பார்கள். இந்த நடைமுறை டிச.1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த மாதம் முதல் வங்கிகள் தங்களது கிரேட் கார்டு பயன்பாட்டில் மாற்றம் கொண்டு வந்துள்ளன. பல வங்கிகள் வெவ்வேறு விதமான மாற்றக்ஙளை கொண்டு வந்துள்ளன. Yes வங்கி பயனர்களுக்கு வழங்கும் ரிவார்ட் சலுகைகளை குறைத்துள்ளது. அதே நேரம் HDFC வங்கியில் கிரேட் கார்டு பயன்படுத்துவர்கள் ஒரு வருடத்தில் கட்டாயம் ரூ.1 லட்சம் பயன்படுத்த வேண்டும் என விதிகளை மாற்றியுள்ளது.
அநே நேரம் இந்த மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ. 1980க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“