செவ்வாய் சூரியனில் இருந்து நான்காவது கிரகம் மற்றும் ஒரு தனித்துவமான சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது. அதில் 2 நிலவுகளையும் கொண்டுள்ளது.
கிரகத்தின் வெளிப்புற சிவப்பு நிறம் காரணமாக சிவப்பு கிரகம் என்றழைக்கப்படுகிறது. இது ஒரு குளிரான, பாலைவன கிரகமாகும். செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிறத்திற்கு ஏற்றவாறு, ரோமானியர்கள் தங்கள் போர் கடவுளின் பெயரை கிரகத்தற்கு சூட்டினர்.
செவ்வாய் கிரகம் "சிவப்பு கிரகம்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது இரவு வானத்தில் பார்க்கும்போது மெல்லிய சிவப்பு / ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். இந்த சிவப்பு நிறம் செவ்வாய் மேற்பரப்பில் இரும்பு தாதுக்கள் மற்றும் தூசி மிகுதியாக இது சிவப்பு நிறத்தில் இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கடந்த காலத்தில் நீர் இருந்ததையும், செவ்வாய் ஒரு காலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய கிரகமாக இருந்தது என்பதையும், அது ஒரு காலத்தில் இன்று இருப்பதை விட அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டிருந்தது என்பதையும் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“