பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்… இன்று இரவு நடக்க இருக்கும் அரிய வானியல் நிகழ்வு

15 வருடங்களுக்கு ஒரு முறை நடக்க இருக்கும் அரிய நிகழ்வு இன்றிரவு எப்போது நிகழும் ?

செவ்வாய் கோள், பூமி, அரிய வானியல் நிகழ்வு

Martian surface : பூமிக்கு மிக அருகில் வர இருக்கும் செவ்வாய் கோள்

செவ்வாய் கோள் இன்று பூமிக்கு மிக அருகில் பயணிக்க இருக்கிறது. அதனை வெறும் கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பினை தவறவிட்டுவிடாதீர்கள். செவ்வாய் , பூமிக்கு அருகிலும், சூரியக் குடும்பத்தில் நான்காவதாகவும் இருக்கும் கோளாகும்.

சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கோளும் சூரியனைச் சுற்றிவர ஒரு குறிப்பிட்ட காலத்தினை எடுத்துக் கொள்ளும்.

பூமி சூரியனைச் சுற்றிவர சராசரியாக 365.25 நாட்களை எடுத்துக் கொள்ளும். செவ்வாய் கோள் தோராயமாக 1.88 ஆண்டுகளை அதாவது 687 நாட்களை எடுத்துக் கொள்ளும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூமியும் செவ்வாயும் மிக அருகில் பயணிப்பது வழக்கம்.

ஆனால் இம்முறை இன்னும் அருகில் இரண்டு கோள்களும் பயணிக்க இருக்கிறது. சூரியனுக்கும் செவ்வாய் கோளிற்கும் மத்தியின் இன்று பூமி இருப்பதால், செவ்வாய் பூமிக்கு எதிராக இருக்கும்.

இந்த நேரத்தில் மிக அதிக அளவு பிரகாசத்துடன் செவ்வாய் காட்சி அளிக்கும். சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இன்று அதிக பிரகாசத்துடன் செவ்வாய் தோன்றலாம்.

To read this article in English 

செவ்வாய் கோள் அழகினை எப்படி பார்ப்பது?

2003ம் ஆண்டு தான் செவ்வாய் பூமிக்கு மிக அருகில் பயணித்தது. இது போன்று மீண்டும் 2034ம் ஆண்டு தான் நிகழும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவு செவ்வாய்  மற்றும் நிலா என இரண்மே விண்ணில் தெரியும். வெற்றுக் கண்களால் இதை பார்வையிட இயலும்.

மிகவும் தெளிவாக பார்க்க விரும்புபவர்கள் டெலிஸ்கோப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்று இரவு பூமிக்கும் செவ்வாய் கோளிற்கும் இடைப்பட்ட தூரம் 35.8 மில்லியன் மைல்களாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா விண்வெளி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அபூர்வ நிகழ்வின் லைவ்வை வீடியோவா பார்க்க இயலும். அதனை நீங்கள் யு – ட்யூப்பிலும் கண்டு மகிழலாம். இன்று இரவு 11 மணியில் இருந்து ( இந்திய நேரப்படி ) ஆகஸ்ட் அதிகாலை 1.30 மணி வரை பார்ப்பதற்கான ஏற்பாட்டினை நாசா செய்திருக்கிறது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Martian surface mars is the closest its been to earth in 15 years how to watch timings and more

Next Story
ஆப்பிள் மற்றும் சாம்சங் போனிற்கு சவாலாக இருக்கும் ஒன்ப்ளஸ்OnePlus Smartphone, Best Smartphones in India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com