/indian-express-tamil/media/media_files/2025/10/19/moto-g06-power-1-2025-10-19-09-46-50.jpg)
ஃப்ளிப்கார்ட் தீபாவளி ஆஃபர்: ரூ.5,000 விலையில் 7,000mAh பேட்டரி கொண்ட மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன்!
மோட்டோரோலா நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய மோட்டோ ஜி6 பவர் (Moto G06 Power) ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் அதிரடி விலை குறைப்பைப் பெற்றுள்ளது. 7,000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த என்ட்ரி-லெவல் போன், இப்போது நம்பமுடியாத குறைந்த விலையில் கிடைக்கிறது. 4GB ரேம்+64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மோட்டோ G06 பவர்-இன் அடிப்படை மாடல், அதன் ஆரம்ப விலையில் இருந்து குறைக்கப்பட்டு, தற்போது வெறும் ரூ.7,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் வங்கி ஆபரை பயன்படுத்தி இந்த விலையை மேலும் குறைக்கலாம். வங்கி சலுகைகள் மூலம் கூடுதலாக ரூ.300 சேமிக்க முடியும். இதன்மூலம், மோட்டோ G06 பவர்-இன் உண்மையான ஆரம்ப விலை வெறும் ரூ.7,199 என்ற கவர்ச்சிகரமான விலைக்குக் குறைகிறது. இது மட்டுமின்றி, பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.5,450 வரை தள்ளுபடி பெறலாம். உதாரணமாக, உங்க பழைய போனுக்கு ரூ.2,100 மதிப்பு கிடைத்தாலும், இந்த போனை நீங்க ரூ.5,000-க்கு வாங்க முடியும். இருப்பினும், பழைய போனின் இறுதி எக்ஸ்சேஞ்ச் மதிப்பு, அதன் மாதிரி மற்றும் நிலையைப் பொறுத்து மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மோட்டோ G06 பவர் முக்கிய அம்சங்கள்
சக்திவாய்ந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 6.88-இன்ச் HD+ டிஸ்பிளே, 120Hz புதுப்பிப்பு விகிதம் உள்ளது. மீடியாடெக் ஹீலியோ G81 எக்ஸ்ட்ரீம் (MediaTek Helio G81 Extreme) ஆப், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹீலியோ UI உள்ளது. 4GB ரேம் + 64GB உள் ஸ்டோரேஜ் (1TB வரை விரிவாக்க முடியும்) சக்திவாய்ந்த 7,000mAh பேட்டரி உடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்,50MP முதன்மை பின்பக்க கேமரா மற்றும் 8MP இரண்டாம் நிலை கேமரா, 4G, LTE, வைஃபை, புளூடூத் ஆதரவு கிடைக்கிறது.
இந்த பட்ஜெட் விலை போனுடன் கூடுதலாக, மோட்டோரோலா எட்ஜ் 60 (Motorola Edge 60) தொடர் ஃபிளாக்ஷிப் போன்களுக்கும் ஃப்ளிப்கார்ட் விற்பனையில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த உயர் ரக போன்களுக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விலை குறைப்புகள் மற்றும் வங்கி சலுகைகள் கிடைக்கின்றன. எனவே, புதிய ஃபிளாக்ஷிப் போனுக்கு மாறுவதற்கு இதுவே சரியான நேரம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.