குறைந்த செலவில் சாட்டிலைட்… குலசேகரப்பட்டினம் திட்டம் பற்றி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்!

இந்த திட்டம் வெற்றியடைந்தால் சர்வதேச அளவில் செயற்கைகோள்கள் அனுப்பும் தலமாக மாறும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

ISRO
ISRO

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் சர்வதேச அளவில் பல செயற்கைக்கோள்கள் அனுப்பும் தளமாக மாறும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அனுப்பதற்கு காரணங்கள் தெரிவித்த மயில்சாமி அண்ணாதுரை, “அறிவியல் ரீதியாக பார்த்தல் கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைப்பது நல்லது, அதனால் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு தெற்கில் இருக்கும் குலசேகரப்பட்டினம் இதற்கு சரியான இடமாக இருக்கும்.

இதையடுத்து, அதிக அளவில் செயற்கைக்கோள்கள் துருவவட்டப் பாதையில் அனுப்பவேண்டும். இந்தியாவில் இருந்து அனுப்பும் ஏவுதளங்கள் இலங்கை வழியாக செல்வதை தடுக்க, சுற்றி அனுப்பப்படுகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில், அதிக அளவில் எரிபொருள்கள் செலவாகிறது.

வரும் காலங்களில் சிறிய எடைக் கொண்ட செயற்கைகோள்களை அனுப்பம் வாய்ப்பு உள்ளது. இதுவரை பல்லாயிரம் செயற்கைகோள்களை இந்தியாவில் இருந்து அனுப்பியிருக்கிறார்கள். அவற்றின் ஆயுட்காலம் முடிவுக்கு வரும்போது, சிறிய நேரத்தில் செயற்கைகோள்களை அனுப்பும் கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவுகணைகள் அனுப்புவதற்கு பதிலாக குலசேகரப்பட்டினத்தில் இருந்து அனுப்புவது தேவையற்ற செலவுகளை குறைக்கும். இந்த திட்டம் வெற்றியடைந்தால் சர்வதேச அளவில் செயற்கைகோள்கள் அனுப்பும் தலமாக மாறும்”, என்று கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Mayilsamy annathurai suggests a new rocket launch pad at kulasekarapattinam december 01

Exit mobile version