Medium Budget Phones: Realme, Motorola, Infinix, Nokia Smartphones offer under Rs 15000: புதிய சாதனத்தை வாங்குவதற்கு பண்டிகைக்காலங்கள்தான் சிறந்த நேரம். இதுவரை வந்த சலுகைகளைத் தவறவிட்டிருந்தால், கீழே உள்ள பட்டியலைப் பார்க்கத் தவறிவிடாதீர்கள். ரியல்மீ 6, ரியல்மீ சி 3, நோக்கியா 5.3 மற்றும் பிற தொலைபேசிகள் தற்போது மிகவும் நியாயமான விலையில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் ரூ.15,000 விலை பிரிவின் கீழ் வருகின்றன. மேலும் இது வித்தியாச அனுபவத்தை நிச்சயம் வழங்கும்.
ரியல்மீ 6
ரூ .9,999 விலையில் ரியல்மீ 6 கிடைக்கிறது. முதலில் இந்த சாதனம் இந்தியாவில் ரூ.12,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதே விலை லேபிளுடன் ஃப்ளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், ஆக்சிஸ் வங்கி டெபிட் கார்டுகளில் ரூ.2,500 தள்ளுபடியை வழங்கி, ரூ. 9,999-ஆகக் குறைக்கிறது. இந்த விலை 6 ஜிபி RAM + 64 ஜிபி சேமிப்பு மாடலுக்கானது. கூடுதலாக, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் ரூ.3,000 தள்ளுபடி பெறலாம். இந்த மொபைலில் 64 MP குவாட் ரியர் கேமரா அமைப்பு, 4,300 mAh பேட்டரி, மீடியா டெக் ஹீலியோ ஜி 90T SoC, 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 30W ஃபிளாஷ் சார்ஜ் ஆகியவை உள்ளன.
மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் +
ஃப்ளிப்கார்ட்டில் ரூ.16,499 விலைக்கு மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் + பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம், இதனை ரூ.14,999-க்கு வாங்கலாம். ஃப்ளிப்கார்ட்டின் மொபைல் செயலியில் இந்த சலுகை தெரியும். முன்னதாக, இதே சாதனம் ரூ.17,499-க்கு கிடைத்தது. இந்த ஆண்ட்ராய்டு தொலைபேசியில் 64 MP குவாட் ரியர் கேமரா அமைப்பு, 5,000 mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC மற்றும் பல உள்ளன.
இன்ஃபினிக்ஸ் ஹாட் 10
இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 தற்போது ரூ.8,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. இதில், 6 ஜிபி RAM + 128 ஜிபி சேமிப்பு இடம் உள்ளது. ரூ.7,850 வரை பரிமாற்ற சலுகையும் கிடைக்கும். இன்ஃபினிக்ஸ் ஹாட் 10, மீடியா டெக் ஹீலியோ ஜி 70 சிப்செட், 6.78 இன்ச் HD + டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,200 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ரியல்மீ சி 3
3 ஜிபி RAM உள்ளமைப்புகொண்ட ரியல்மீ சி 3, ரூ.7,999 விலையில் விற்கப்படுகிறது. ரூ.1,000 தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் அளிக்கிறது. இருப்பினும், 32 ஜிபி சேமிப்பிடத்தை மட்டுமே பெறுகிறீர்கள். உங்கள் பழைய சாதனத்தை எக்ஸ்சேஞ் செய்ய விரும்பினால், புதிய தொலைபேசியில் ஃப்ளிப்கார்ட் ரூ. 6,800 வரை தள்ளுபடி செய்யும். இந்த தொகை உங்கள் ஸ்மார்ட்போனின் தற்போதைய நிலையைப் பொறுத்தது. 4 ஜிபி RAM + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.8,999. எரிமலை சாம்பல் மற்றும் உறைந்த நீல வானங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. விவரக்குறிப்புகளைப் பொருத்தவரை, 5,000 mAh பேட்டரி, மீடியா டெக் ஹீலியோ ஜி 70 சிப்செட், 6.52 இன்ச் பேனல் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.
நோக்கியா 5.3
இந்தியாவில் ரூ.14,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 5.3, ஃப்ளிப்கார்ட்டில் ரூ.9,999 விலைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளத்தில்,ரூ.12,499 பட்டியலுக்குக் கீழ் இந்த ஸ்மார்ட்போனைக் காண முடியும். சிட்டி, கோட்டக் வங்கி கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு ஆகியவற்றில் ரூ.2,500 உடனடி தள்ளுபடி சலுகை உள்ளது. இதில் ஏதாவது ஒரு கார்டு இருந்தால், நீங்கள் கைப்பேசியை ரூ.9,999-க்கு வாங்க முடியும். எக்ஸ்சேஞ் சலுகையில் ரூ.11,250 வரை தள்ளுபடி உள்ளது. இந்தச் சலுகையை Amazon.in-ல் காணலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"