பார்ப்பவர்களை மிரள வைக்கும் கோரைப் பற்களுடன் இருக்கும் அரிய வகை கபூன் வைப்பர் பாம்பு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல காடுகளில் காணப்படும் மிகவும் விஷமுள்ள பாம்பு இனமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Meet Gaboon viper, the snake with the longest fangs
கபூன் வைப்பர் சீறுவதில்லை, துரத்துவதில்லை, எச்சரிப்பதுமில்லை. ஆனால் அது தாக்கும்போது, துல்லியத்துடனும் மிக நீளமான கோரைப் பற்களுடனும் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரியைத் தாக்குகிறது. சஹாரா துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளிலும் புல்வெளிகளிலும் காணப்படும் கபூன் வைப்பர் (Bitis gabonica) பெரும்பாலும் பார்ப்பது அரிது.
கபூன்வைப்பர் பாம்பின் உடல் பசுமை, மண்ணுக்கே உரிய பழுப்பு, ஊதா நிறங்கள் மற்றும் இலைகளைப் போல் தோற்றமளிக்கும். கீழே விழுந்த இலைகளுக்கு நடுவில் கிடக்கும். இது அசையாமல் கிடப்பதனால், அனுபவமுள்ள பாம்பு ஆய்வாளர்களுக்கே இதை கவனிக்க முடியாமல் போகிறது. இது பயத்தால் அசையாமல் கிடப்பதல்ல. அது தந்திரம். இந்த பாம்பு விலங்குகளைத் தாக்குவதற்குப் பதிலாக, காத்திருந்து தாக்கும் முறையை விரும்புகிறது. சிறிய பாலூட்டி ஜீவிகள் (அ) பறவைகள் அருகில் வரும்வரை பொறுமையாக காத்திருக்கிறது. அருகில் வந்ததும், கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/05/24/ukPCI5pWmzNHa6uWxnY7.jpg)
ஆப்பிரிக்காவின் மிக கனமான விஷ பாம்பாகும். சுமார் 8 கிலோ (18 பவுண்டுகள்) எடை கொண்டது, மேலும் இது 1.8 மீட்டர் (சுமார் 6 அடி) நீளம் வரை வளரும். காபூன் வைப்பர் எந்த பாம்பிலும் இல்லாத மிக நீளமான கோரைப் பற்களைக் கொண்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். இந்த வகை பாம்பின் தோல் வெல்வெட் போன்று காணப்படும். அதன் கோரை பற்கள் இது 5 செ.மீ ( 2 அங்குலம்) நீளம் கொண்டது. தடிமனான உடல் செவ்வகங்கள் மற்றும் முக்கோணங்கள் பஃப், ஊதா மற்றும் பழுப்பு நிறங்களுடன் பிரம்மாண்டமான தோற்றத்தில் காணப்படும். இது வேகமாக ஊர்ந்து செல்லும் பாம்பு அல்ல. பூமியில் உள்ள எந்த விஷப் பாம்பின் பற்களைக் காட்டிலும் மிக நீளமானது. இந்த பாம்பு அதிக அளவிலான சக்திவாய்ந்த சைட்டோடாக்சிக் விஷத்தைச் செலுத்துகிறது. இது மனித உடலின் திசுக்களை சிதைத்து கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. அதிர்ஷ்டவசமாக, அதன் அமைதியான இயல்பு மற்றும் தொலைதூர வாழ்விடங்கள் காரணமாக, மனிதர்களுக்கு பாதிப்பு மிக குறைவு.
மனிதர்களுக்கு ஆபத்தானதா?
ஆம். இந்த பாம்பு சீண்டினாலோ அல்லது அதனை மிதித்தாலோ மட்டுமே கடிக்கும். கபூன் வைப்பரின் விஷம் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தை விளைவிக்கும். ஆனால், இந்த பாம்பு மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதை விட அவர்களைத் தவிர்ப்பதிலேயே அதிக ஆர்வம் கொண்டுள்ளது. அதன் அமைதியான மற்றும் மந்தமான இயல்பு காரணமாக பெரும்பாலும் தவறுதலாக மிதிக்கப்படுகிறது. விஷமுறிவு மருந்து உள்ளது. மேலும், மருத்துவ வசதி கிடைக்கும் இடங்களில் மரணங்கள் ஏற்படாது. உச்சநிலை பதுங்கித் தாக்கும் வேட்டையாடும் உயிரினமாக, கபூன் வைப்பர் பறவைகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிரிக்காவின் வன சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு முக்கியமான மற்றும் அழகான பகுதியாகும். துரதிர்ஷ்டவசமாக, பல இனங்களைப் போலவே, காடழிப்பு மற்றும் மனித ஆக்கிரமிப்பு காரணமாக இந்த வகை பாம்புகள் வாழ்விட இழப்பை எதிர்கொள்கின்றன.