/indian-express-tamil/media/media_files/2025/10/07/hybrid-phone-2025-10-07-22-15-58.jpg)
ரூ.3,999-க்கு டச் ஸ்கிரீன், வீடியோ கால்: HMD-ன் புதிய 'ஹைபிரிட் ஃபோன்' மாடல் வெளியீடு!
ஃபீச்சர் ஃபோன்களின் எளிமையையும், ஸ்மார்ட்போன்களின் நவீன அம்சங்களையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு புதிய முயற்சியில், HMD குளோபல் நிறுவனம் களமிறங்கியுள்ளது. அந்நிறுவனம் இந்தியாவில் தனது புதிய HMD டச் 4G சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை "ஹைபிரிட் ஃபோன்" (Hybrid Phone) என்றழைக்கிறார்கள். இதன் விலை வெறும் ரூ.3,999 மட்டுமே.
ரூ.3,999-க்கு ஸ்மார்ட்போன் வசதிகள் எப்படி கிடைக்கும்?
இந்த HMD டச் 4G ஃபோன், ஃபீச்சர் ஃபோன் பயனாளர்களை இலக்காகக் கொண்டது. வழக்கமான மொபைலின் எளிமையைத் தக்கவைத்துக் கொண்டே, சில முக்கிய ஸ்மார்ட் அம்சங்களை கிளவுட் தொழில்நுட்பம் மூலம் அணுக உதவுகிறது. சமூக வலைதளங்களில் இணைந்திருக்க இது சிறப்பான வழி. இந்த ஃபோனில் 'எக்ஸ்பிரஸ் சாட்' (Express Chat) என்ற ஆஃப் பிரீ-லோட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்க சாட் செய்யலாம், வாய்ஸ்நோட்ஸ் அனுப்பலாம், வீடியோ கால்கள் பேசலாம். அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ். பெறுநர்கள் ஆண்ட்ராய்டு (Android) அல்லது iOS (ஐபோன்) பயனர்களாக இருந்தாலும் கவலையில்லை; அவர்களுடனும் இந்த ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
வழக்கமான ஃபீச்சர் ஃபோன்போல இல்லாமல், இந்த டச் 4G ஃபோன் சில முக்கியமான கிளவுட்-அடிப்படையிலான ஆஃப்களை அணுக அனுமதிக்கிறது. இதன் மூலம், நியூஸ், வானிலை போன்ற அன்றாடத் தேவைகளுக்கான தகவல்களை விரல்நுனியில் பெறலாம். முக்கியமாக, கிரிக்கெட் ரசிகர்கள் உடனுக்குடன் கிரிக்கெட் ஸ்கோர்களைச் சரிபார்க்க முடியும். நேரம் போவதற்காக விளையாட நினைப்பவர்களுக்கு, டெட்ரிஸ் (Tetris) மற்றும் சுடோகு (Sudoku) போன்ற பிரபலமான HTML5 கேம்களையும் இந்த ஃபோன் ஆதரிக்கிறது.
புளூடூத் ஷேரிங், வைஃபை மற்றும் வைஃபை ஹாட்ஸ்பாட் செயல்பாடு, வயர்டு மற்றும் வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ ஆதரவு, கால் ரெக்கார்டிங், எம்.பி.3 பிளேபேக் போன்ற அம்சங்களையும் இது கொண்டுள்ளது. 3 முறை கிளிக் செய்தாலோ அல்லது நீண்ட நேரம் அழுத்தினாலோ அவசர அழைப்புகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாட் வசதியை விரைவாக அணுகுவதற்கு ஒரு பிரத்யேக ICE (In case of Emergency) பட்டன் உள்ளது.
3.2-இன்ச் டச் ஸ்கிரீன்; எளிதான பயன்பாட்டிற்காக டச் வசதி உள்ளது. 1950mAh பேட்டரி மற்றும் நவீன USB டைப்-C சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. பின்புறம் 2MP கேமரா (LED ஃப்ளாஷ் உடன்) மற்றும் முன்புறம் 0.3MP (VGA) கேமரா உள்ளது. லேசான தூசி மற்றும் தண்ணீர் தெறிப்பிலிருந்து பாதுகாக்கும் IP52 தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
எங்கே வாங்கலாம்?
இந்த புதிய HMD டச் 4G ஃபோன், HMD-ன் அதிகாரப்பூர்வ இணையதளம், தேர்ந்தெடுக்கப்பட்ட இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கிறது. ஃபீச்சர் ஃபோனின் பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் அனுபவத்தை விரும்புவோருக்கு, இந்த HMD டச் 4G நல்ல தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.