/indian-express-tamil/media/media_files/K5kCW0CSHiJFOK5a4iuh.jpg)
உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் (கே.ஐ.இ.டி) மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து மனித உருவ ரோபோவை உருவாக்கி உள்ளனர். இதற்கு அனுஷ்கா என்று பெயர் வைத்துள்ளனர்.
அனுஷ்காவின் தற்போதைய வெர்ஷன் முதன்மையாக பார்வையாளர்களை வரவேற்கவும், பயனர்கள் கேட்பதற்கு பொருத்தமான தகவல்களை வழங்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ரோபோ ரிசப்ஷனிஸ்ட் வேலைகளை செய்கிறது. இருப்பினும் இதை மருத்துவம் மற்றும் ஆலோசனையில் பயன்படுத்தக்கூடிய வகையிலும் மாற்றப்பட்டுள்ளது.
மார்ச் 2024-ல் அனுஷ்கா முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது, அனுஷ்கா வட இந்தியாவில் உருவாக்கப்பட்ட தன்னாட்சி இயக்கத்துடன் கூடிய முதல் மனித உருவ ரோபோ என்று கூறப்படுகிறது. இந்த மனித ரோபோ அதன் சில புருவங்களை உயர்த்தக் கூடியது.
கல்லூரியின் இணை இயக்குனர் டாக்டர் மனோஜ் கோயல் பேசுகையில், ந்த ரோபோ ரூ. 2 லட்சம் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது என்றார். மனித உருவ ரோபோக்களை உருவாக்க ரூ.7-8 கோடி செலவாகும் நிலையில் இது குறைந்தவிலையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள சில பாகங்கள் உள்ளூர் குப்பைக் கிடங்கில் இருந்து எடுத்து அதை வடிவமைப்பு பயன்படுத்தியுள்ளோம் என்றார். மேலும் ஒன்றரை ஆண்டுகளில் இந்த ப்ராஜெட் முடிக்கப்பட்டது என்றார்.
The master-slave configuration
மனித சைகைகளை பாண்டோமைம் செய்ய அனுஷ்காவை அனுமதிக்கும் அடிப்படை தொழில்நுட்பம், ஒரு மாஸ்டர்-ஸ்லேவ் கட்டிடக்கலையைப் பயன்படுத்துகிறது, அங்கு i7 ப்ராஸசர் மூளையாக செயல்படுகிறது, மைக்ரோகண்ட்ரோலர்கள் மற்றும் சர்வோ மோட்டார்களின் நெட்வொர்க்கைக் கட்டளையிட்டு கை, கால்கள், கண்களின் அசைவுகளை செய்யத் தூண்டுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Meeting Anushka, a low-budget humanoid robot built with parts from a dump yard
அனுஷ்கா கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளிக்க இயற்கை மொழி செயலாக்கத்தை (NLP) பயன்படுத்துகிறார். ஒரு நபரின் Voice commandsகளை கேட்டு ரோபோபின் நெக்லஸின் பின்னால் புத்திசாலித்தனமாக வைக்கப்பட்டுள்ள மைக்ரோஃபோன் மூலம் கைப்பற்றப்பட்டு, டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றப்படுகின்றன. அதன் பின் ரோபோ பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.