பூமி மெதுவாக சுழல்கிறது இதன் காரணமாக இங்கு நேரங்களில் பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும் ஒரு நொடி அளவில் மட்டுமே வித்தியாசம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. Nature இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், உயரும் வெப்பநிலை காரணமாக துருவப் பனி உருகுகிறது. இதன் காரணமாக பூமி குறைவான வேகத்தில் சுழல்கிறது.
இதனால் 2029-ம் ஆண்டிற்குள் "நெகட்டிவ் லீப் செகண்ட்" என்று அழைக்கப்படும் மாற்றம் நடைபெற உள்ளது.
அதாவது நமது நேரத்தில் ஒரு நொடி கழிக்கப்படும் என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இது கணினி நெட்வொர்க் நேரத்திற்கு எதிர்பாராத சிக்கலை ஏற்படுத்தும் மற்றும் UTC-ல் திட்டமிடப்பட்டதை விட முன்னதாகவே மாற்றங்கள் தேவைப்படலாம்" என்று ஆய்வின் ஒரு பகுதி கூறுகிறது.
கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராஃபியின் புவி இயற்பியலாளரான டங்கன் அக்னியூ இந்த ஆய்வின் ஆசிரியர் ஆவார். இவர் கூறுகையில், துருவங்களில் பனி உருகும்போது, பூமியின் எடை குவிந்திருக்கும் இடத்தில் அது மாறுகிறது. இந்த மாற்றம், கிரகத்தின் கோண வேகத்தை பாதிக்கிறது.
துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உருகுவதால், பூமியின் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள எடையை அதிகரித்து வருகிறது, இது கிரகத்தின் சுழற்சியை பாதிக்கிறது.
மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் புவி இயற்பியல் பேராசிரியரான தாமஸ் ஹெர்ரிங் கூறுகையில், "நீங்கள் பனி உருகுவதை என்ன செய்கிறீர்கள் என்றால், அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து போன்ற இடங்களில் திடமாக உறைந்திருக்கும் தண்ணீரை எடுத்துக் கொள்கிறீர்கள், மேலும் அந்த உறைந்த நீர் உருகுகிறது, மேலும் நீங்கள் திரவங்களை கிரகத்தின் மற்ற இடங்களுக்கு நகர்த்துகிறீர்கள். நீர் வெளியேறுகிறது, பூமத்திய ரேகையை நோக்கி செல்கிறது" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“