இந்தியாவில் இன்று வெளியாகிறது சி - கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் பென்ஸ் கார்

இதன் விலை இந்தியாவில் 39.90 லட்சத்தில் தொடங்கி சுமார் 45.40 லட்சம் வரை இருக்கும் என தகவல்

சி – கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் ( C-Class Facelift ) பென்ஸ் கார் : கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மெர்சடஸ் பென்ஸ் காரினை இயக்குவதற்காக புத்தம் புதிய BSVI பெட்ரோல் மற்றும் டீசன் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கார்கள் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது இந்த கார்.

சி – 200 மாடல் கார் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் எஞ்சினைக் கொண்டிருக்கிறது. அதன் திறன் 184PS/280Nm என்ற அளவில் இருக்கிறது. அதே போல் சி – 220 டி ரக காரானது 2.0 லிட்டர் டீசல் எஞ்சினைக் கொண்டிருக்கிறது. அதன் செயல் திறனானது சுமார் 194PS/440Nm என்ற அளவில் இருக்கிறது.

சி 200 மற்றும் சி 220-டி ரக கார்களைப் போலவே சி-300 மற்றும் சி-300டி ரக கார்களையும் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மிக விரைவில் எதிர்பார்க்கலாம். சி 300 தற்போது புதிய 2.0 பெட்ரோல் எஞ்சினுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதன் செயல்திறன் 258PS/370Nm ஆகும். அதே போல் சி 300 டியின் செயல்திறன் 245PS/500Nm ஆகும்.

C-Class Facelift விலை

இந்த புதிய கார்களின் விலை 39.90 லட்சத்தில் தொடங்கி சுமார் 45.40 லட்சம் வரை ஆகும். டைமன்ட் ஸ்டட்டட் சிங்கிள் ஸ்லாட் க்ரில்லுடன் வெளியாகும் இந்த கார்களில் எல்.இ.டி ஹெட்லேம்புகள் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வெளியான பென்சில் இருக்கும் 16 மற்றும் 17 இன்ச் அல்லாய்களுக்கு பதிலாக 18 அங்குல அல்லாய்களுடன் வருகிறது புதிய 2018 சி – கிளாஸ் கார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close