மின்சாரம் மட்டுமல்ல, இனி தங்கமும் உற்பத்தி! அணுக்கரு இணைவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புரட்சிகர அறிவிப்பு!

அணுக்கரு இணைவு ஆற்றல் துறையில் செயல்படும் மேரத்தான் ஃபியூஷன் (Marathon Fusion) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், பாதரசத்தைத் தங்கமாக மாற்றும் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அணுக்கரு இணைவு ஆற்றல் துறையில் செயல்படும் மேரத்தான் ஃபியூஷன் (Marathon Fusion) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், பாதரசத்தைத் தங்கமாக மாற்றும் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

author-image
Meenakshi Sundaram S
New Update
mercury into gold

மின்சாரம் மட்டுமல்ல, இனி தங்கமும் உற்பத்தி! அணுக்கரு இணைவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புரட்சிகர அறிவிப்பு!

அணுக்கரு இணைவு ஆற்றல் துறையில் செயல்படும் மேரத்தான் ஃபியூஷன் (Marathon Fusion) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், பாதரசத்தைத் தங்கமாக மாற்றும் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தூய்மையான ஆற்றலை உற்பத்தி செய்யும் அதே அணுக்கரு இணைவு செயல்முறையைப் பயன்படுத்தி, பாதரசத்தை (Mercury) தங்கமாக (Gold) மாற்ற முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

அணுக்கரு மாற்றத்தின் மூலம் தங்கம் உற்பத்தி:

மேரத்தான் ஃபியூஷன் நிறுவனம் இன்னும் பரிசீலனை செய்யப்படாத (yet-to-be-peer-reviewed) ஆய்வுக் கட்டுரையில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஒரு தனிமத்தின் அல்லது ஐசோடோப்பின் உட்கருவிலிருந்து புரோட்டான்களைப் பிரித்தெடுப்பதன் மூலம் அதனை வேறு தனிமமாக மாற்றும் அணுக்கரு மாற்றம் (Nuclear Transmutation) என்ற செயல்முறையைப் பயன்படுத்தி தங்கத் துகள்களை உருவாக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு குறித்து ஆய்வு செய்த எரிசக்தித் துறையின் பிளாஸ்மா இயற்பியலாளர் அஹமத் டயல்லோ, ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "காகிதத்தில் இது மிகச் சிறப்பாகத் தெரிகிறது, இதுவரை நான் பேசிய அனைவரும் இதில் ஆர்வம் காட்டி உற்சாகமாக உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில், மேரத்தான் ஃபியூஷன் நிறுவனம் 6 மில்லியன் டாலர் முதலீடுகளையும், 4 மில்லியன் டாலர் அரசு நிதியுதவிகளையும் திரட்டியுள்ளது. அணுக்கரு இணைவு மின் அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதில் இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், சூரியனின் மையத்தில் நடக்கும் அணுக்கரு இணைவை பூமியில் உருவாக்குவது பல தசாப்த கால ஆராய்ச்சிக்குப் பிறகும் ஒரு சவாலாகவே உள்ளது. விஞ்ஞானிகள் இப்போதும் இந்த உலைகள் இயங்குவதற்குத் தேவையானதை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும் புள்ளியை எட்ட போராடி வருகின்றனர்.

Advertisment
Advertisements

பாதரசத்திலிருந்து தங்கம்: எப்படி?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மேரத்தான் நிறுவனம் பாதரசம்-198 என்ற ஐசோடோப்பை அணுக்கரு இணைவு உலைக்குள் செலுத்தி, அதை பாதரசம்-197 ஆக மாற்ற முடியும் என்று முன்மொழிந்தது. இந்த பாதரசம்-197 ஒரு நிலையற்ற ஐசோடோப்பு, இறுதியாகச் சிதைந்து தங்கம்-197 (Gold-197) ஆக மாறுகிறது. இந்த செயல்முறை இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆடம் ரூட்கோவ்ஸ்கி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கைல் ஷில்லர் ஆகியோர் இதில் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர். ஒரு ஜிகாவாட் மின் உற்பத்திக்கு ஆண்டுக்கு 11,000 பவுண்டுகள் (சுமார் 5,000 கிலோகிராம்) தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், இது மின் உற்பத்திக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர்கள் மதிப்பிடுகின்றனர். இது அணுக்கரு இணைவு மின் நிலையங்களின் வருவாயை திறம்பட இரட்டிப்பாக்கும் என்கிறார்கள்.

உருவாக்கப்படும் தங்கம் நிலையானது என்றாலும், அதில் கதிரியக்க ஐசோடோப்புகளின் தடயங்கள் இருக்கலாம். இதனால், தங்கம் பாதுகாப்பாகக் கையாளப்பட அல்லது விற்கப்படுவதற்கு முன் 14 முதல் 18 ஆண்டுகள் வரை பாதுகாப்பாகச் சேமிக்கப்பட வேண்டியிருக்கும் என்று நிறுவனம் குறிப்பிடுகிறது. தங்கத்திற்கு அப்பால், இதே அணுக்கரு செயல்முறைகளைப் பயன்படுத்தி "அணு பேட்டரிகள்," மருத்துவத்திற்கான ஐசோடோப்புகள், மற்றும் பல்லேடியம் போன்ற பிற மதிப்புமிக்கப் பொருட்களையும் உருவாக்க முடியும் என்று மேரத்தான் ஃபியூஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அணுக்கரு இணைவு ஆற்றல் துறைக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடுகள் வந்தாலும், அணுக்களை இணைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் அடிப்படை கருத்து இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கண்டுபிடிப்பு, அணுக்கரு இணைவு ஆற்றலின் எதிர்காலத்திற்கு புதிய பரிமாணத்தை அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Science Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: