மெட்டா ஏ.ஐ. கண்ணாடிகளில் தீபிகா படுகோன் குரல்... யு.பி.ஐ. பேமெண்ட் வசதியும் அறிமுகம்!

மெட்டா நிறுவனம் தனது Ray-Ban ஏ.ஐ. கண்ணாடிகளில் ஹாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் இந்திய ஆங்கில ஏ.ஐ குரல் அசிஸ்டெண்ட் ஆக சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் 'ஹே மெட்டா' என்று கூறி இக்குரலுடன் உரையாடலாம்.

மெட்டா நிறுவனம் தனது Ray-Ban ஏ.ஐ. கண்ணாடிகளில் ஹாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் இந்திய ஆங்கில ஏ.ஐ குரல் அசிஸ்டெண்ட் ஆக சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் 'ஹே மெட்டா' என்று கூறி இக்குரலுடன் உரையாடலாம்.

author-image
WebDesk
New Update
Deepika Padukone

மெட்டா ஏ.ஐ. கண்ணாடிகளில் தீபிகா படுகோன் குரல்... யு.பி.ஐ. பேமெண்ட் வசதியும் அறிமுகம்!

சமூக ஊடக ஜாம்பவானான மெட்டா, தனது ரே-பான் மெட்டா (Ray-Ban Meta) கண்ணாடிகளில் பல அதிரடி ஏ.ஐ. அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. உலகளாவிய பிரபலங்களான Awkwafina, Judi Dench போன்றோரின் வரிசையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் ஏ.ஐ. குரலையும் மெட்டா ஏ.ஐ. அசிஸ்டெண்ட் (AI Assistant) அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்தப் புதிய அப்டேட் மூலம், இந்தக் கண்ணாடிகள் வாய்ஸ் வழியாகக் கைகளை உபயோகிக்காமல் (hands-free) உரையாடவும், யு.பி.ஐ. லைட் கட்டணங்களுக்கு இந்தி மொழியில் ஆதரவளிக்கவும், மேலும் பண்டிகைக் காலத்திற்கேற்ப போட்டோக்களை திருத்தியமைக்கவும் அனுமதிக்கின்றன. ஏ.ஐ. மூலம் பிரபலங்களின் உருவங்கள் (deepfakes) தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஏ.ஐ. குரல் கொடுத்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெறுகிறார்.

1. தீபிகா படுகோனின் ஏ.ஐ. குரலில் உரையாடல்

புதிய அப்டேட் மூலம், பயனர்கள் தங்கள் போனைக் கையில் எடுக்காமலேயே, Ray-Ban மெட்டா கண்ணாடிகள் வழியாக ஏ.ஐ. அசிஸ்டெண்ட் உடன் குரல்வழியாகப் பேசலாம். பயனர்கள் வெறுமனே ‘ஹே மெட்டா’ (Hey Meta) என்று சொன்னால் போதும், உரையாடல் தொடங்கும். உடனடியாக ஒரு விஷயத்தை விளக்கக் கேட்கலாம், பொது அறிவுத் தகவல், புதிர் அல்லது வாக்கியத்தை மொழிபெயர்க்கக்கூடக் கோரலாம். மெட்டா ஏ.ஐ. கண்ணாடிகள் வழியாகவே பதிலளிக்கும். மெட்டா ஏ.ஐ. செயலிக்குச் சென்று, Device Settings > Meta AI > Language and Voice என்பதில் தீபிகா படுகோனின் இந்திய ஆங்கில ஏ.ஐ. குரலைத் தேர்ந்தெடுக்கலாம்.

2. இனி கண்ணாடிகளுடன் இந்தியிலேயே பேசலாம்!

மெட்டா AI-Ray-Ban கண்ணாடிகளின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், பயனர்கள் இனி தங்கள் கண்ணாடிகளுடன் இந்தி மொழியில் பேசலாம். இந்தியாவின் உள்நாட்டு ஏ.ஐ. மாடல் உருவாக்குநரான சர்வம் (Sarvam) நிறுவனத்தின் காரணமாக இந்தி மொழி ஆதரவு சாத்தியமாகியுள்ளது. மெட்டா ஏ.ஐ. ஆஃப்பில் Device Settings > Meta AI > Language and Voice என்பதற்குச் சென்று, விரும்பிய மொழி இந்தியைத் தேர்வு செய்யலாம்.

Advertisment
Advertisements

இதன் மூலம், கேள்விகள் கேட்பது ("ஹே மெட்டா, இன்று வானிலை எப்படி இருக்கு?"), புகைப்படங்கள் எடுப்பது, வீடியோக்களைப் பதிவு செய்வது அல்லது கால்ஸ்க்கு பதிலளிப்பது போன்ற அனைத்துக் கட்டளைகளையும் இந்தியிலேயே கொடுக்க முடியும். இது, இலட்சக்கணக்கான இந்தியப் பயனர்களுக்கு மொழித் தடையைப் போக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. 'Restyle this' மூலம் தீபாவளி புகைப்படங்கள் எடுங்க!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, மெட்டா குறிப்பிட்ட காலத்திற்கான ‘Restyle this’ என்ற தீபாவளி அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை வான வேடிக்கைகள், ரங்கோலி எஃபெக்ட்கள் மற்றும் பலவற்றால் அலங்கரித்து, கைகளை உபயோகிக்காமல் திருத்தியமைக்கலாம். கண்ணாடிகள் மூலம் படம் எடுத்த பிறகு, “ஹே மெட்டா, ரெஸ்டைல் திஸ்” என்று சொன்னால், மெட்டா ஏ.ஐ. தானாகவே படத்தைத் தீபாவளிக்கு ஏற்ப மாற்றும். இந்தப் படங்களை மெட்டா ஏ.ஐ. ஆஃப் மூலம் சேமிக்கலாம் அல்லது பகிரலாம்.

4. கண்ணாடிகள் வழியாகவே யு.பி.ஐ. லைட் கட்டணம்!

ரே-பான் மெட்டா கண்ணாடிகள் மூலம் யு.பி.ஐ. க்யூஆர் குறியீடு கட்டணங்களை நேரடியாகச் செலுத்தும் அம்சத்தையும் மெட்டா தற்போது சோதனை செய்து வருகிறது. இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ரூ.1,000-க்கும் குறைவான தொகையைச் செலுத்த, பயனர்கள் வெறுமனே “ஹே மெட்டா, ஸ்கேன் அண்ட் பே” (Scan and Pay) என்று சொன்னால் போதும். மெட்டா ஏ.ஐ, பயனரின் வாட்ஸ்அப்-உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் யு.பி.ஐ. லைட் வழியாக பணத்தைச் செலுத்தும். இதற்குப் போன் அல்லது பணப்பையைத் தொட வேண்டிய அவசியமே இல்லை. இது அன்றாடச் சிறிய தொகைப் பரிவர்த்தனைகளை வேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தடையற்றதாகவும் மாற்றும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: