மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தளம் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. இதில் குறிப்பாக ரீல்ஸ் அம்சம் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது பயனர்களின் வசதிக்கு ஏற்ப மெட்டா நிறுவனம் ரீல்ஸ் அம்சத்தில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Follow the trend
கிரியேட்டர்ஸ் புதிய புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருவர். புதிய யோசனைகளைத் தேடுவர். டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்று நினைப்பர். அந்த வகையில் Follow the trend என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரீல்ஸில் சிறந்த டிரெண்டிங் பாடல்களைப் பார்க்கவும், அது எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதையும் பார்க்க இந்த அம்சம் உதவும். பயனர்கள் அந்த ஆடியோவைப் பயன்படுத்துவதோடு அதை ஷேவ் செய்தும் கொள்ளலாம்.
ரீல்ஸ் எடிட்
இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது ஒரே ஸ்கிரீனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோ கிளிப்ஸ், ஸ்டிக்கர், ஆடியோ அல்லது டெக்ஸட் ஆகியவற்றை சேர்த்து எடிட் செய்யலாம். இது ரீல்ஸ் எடிட்டிங் செய்வதை எளிதாக்கும் மற்றும் பயனர்கள் தங்கள் படைப்புகளை அவர்கள் கற்பனை செய்தபடி காட்சிப்படுத்த உதவும். இந்த அம்சம் உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் பயன்படுத்த முடியும்.
ரீல்ஸில் பரிசுகள்
மெட்டா தனது பயனர்கள், கிரியேட்டர்களை கவரும் வகையில் Gifts on Reels அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் கிரியேட்டர்களின் ரசிகர்கள் பரிசு அனுப்புவதை காண்பிக்கிறது. கிரியேட்டர்ஸ் அவர்களின் ஆதரவாளர்களின் ஐடியை கிளிக் செய்து அதைப் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil