மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சமூகவலைதளத்தை நிர்வகித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் இளைஞர்களுக்கு பிடித்த தளமாக உள்ளது. ரீல்ஸ், ஸ்டோரி என ட்ரெண்டாக உள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது. இளைஞர்கள் மற்றும் அல்லாமல் முதியவர்களும் இன்ஸ்டா ரீல்ஸ் செய்து அசத்துகின்றனர். அந்தவகையில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிற்கான புதிய ரீல்ஸ் அம்சங்கள், இன்ஸ்டா ரீல்ஸில் ஸ்டிக்கர் பயன்படுத்துவது என பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
இன்ஸ்டா ரீல்ஸில் ஸ்டிக்கர்
இன்ஸ்டா, பேஸ்புக் ரீல்ஸில் ‘Add Yours’ ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. முன்பு ஸ்டோரில் மட்டும் ஸ்டிக்கர் பயன்படுத்தும் அம்சம் இருந்த நிலையில் தற்போது ரீல்ஸிலும் ஸ்டிக்கர் பயன்படுத்தும் படி புது அப்டேட் செய்யப்பட உள்ளது.
ஸ்டார் அம்சம்
மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் ‘Stars’ ஸ்டார்ஸ் என புது அம்சம் கொண்டு வரவுள்ளது. முன்பு பேஸ்புக் ரீல்ஸில் இந்த அம்சம் இருந்தது. தற்போது இன்ஸ்டாவில் வரவுள்ளது. உங்களுக்கு பிடித்தமான ரீல்ஸ் கிரியேட்டரை இதன் மூலம் ஆதரவளிக்கலாம். வருமானம் பெறும் வகையில் இது கொண்டுவர உள்ளது.
இன்ஸ்டா டூ பேஸ்புக் ரீல்ஸ்
இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸை பேஸ்புக்கிலும் பயன்படுத்திக் கொள்ளும்படி புது அம்சம் கொண்டுவரப்பட உள்ளது. இது கன்டெண்ட் கிரியேட்டருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தளங்களிலும் ரீல்ஸ் சேர் செய்யும்போது அது அதிகப்படியான பயனர்கள் பார்க்க முடியும்.
பேஸ்புக் ஸ்டோரியில் இருந்து ரீல்ஸ்
பேஸ்புக்கில் போடப்படும் ஸ்டோரியில் இருந்து தானாகவே ரீல்ஸ் உருவாக்கப்படும் கருவி ஒன்றை மெட்டா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பேஸ்புக் ரீல்ஸ் ரீமிக்ஸ்
பேஸ்புக் ரீல்ஸ் ரீமிக்ஸ் என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரீல்ஸைத் தொடர்ந்து பயனர்கள் தங்களது சொந்த வீடியோவையும் அதில் காண்பிக்க முடியும். இது பேஸ்புக் ரீல்ஸ் கிரியேட்டர் ஸ்டுடியோவில் சேர்க்கப்படும். இதன் மூலம் பயனர்கள் தங்களது ரீல்ஸை எத்தனை பேர் பார்த்துள்ளனர், எவ்வளவு நேரம் பார்த்துள்ளனர் என்று அறிந்துகொள்ள முடியும்.