New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Express-Photo.jpg)
வாட்ஸ்அப்-ன் அனைத்து வசதிகளையும் ஸ்மார்ட் வாட்ச்-ல் பயன்படுத்தும்படி மெட்டா நிறுவனம் தனி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துகின்றனர். பட்ஜெட் விலை முதல் விலை உயர்ந்தது வரை பல வெரைட்டிகளில் ஸ்மார்ட் வாட்ச் கிடைக்கிறது. குறிப்பாக இதன் அம்சங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.
அதன்படி, மிகவும் பிரபலமான செயலியான வாட்ஸ்அப்பையும் ஸ்மார்ட் வாட்ச்-ல் பயன்படுத்த முடியும். இதற்காக மெட்டா நிறுவனம் ஸ்டேன்அலோன் ஆப்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் வாட்ச் அணிந்த படியே மெசேஜ் அனுப்பலாம், கால் பேசலாம் மற்ற அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பர்க் இந்த செயலியை அறிமுகப்படுத்தினார். Wearables க்கான Google இன் இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான Wear OS 3 இல் இயங்கும் ஸ்மார்ட்வாட்ச்களில் இதைப் பயன்கடுத்த முடியும்.
Wear OSக்கான வாட்ஸ்அப் செயலி பல மாதங்களாக செயல்பாட்டில் உள்ளது மற்றும் மே மாதம் அதன் I/O மாநாட்டில் Google ஆல் முதலில் வெளியிடப்பட்டது, Spotify மற்றும் Peloton போன்ற மூன்றாம் தரப்பு டெவலப்பர்களின் பிற புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பயன்பாடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.