/indian-express-tamil/media/media_files/2025/05/29/EOlbr7oV9McHdJa2QTnQ.jpg)
நீண்ட காத்திருப்புக்குப் பலன்: இனிமே பெரிய ஸ்கிரீனில் வாட்ஸ்அப்! ஐபேட் பயனர்கள் குஷி!
ஆப்பிள் (Apple) பயனர்கள் பல வருடங்களாக கேட்டுவந்த அப்டேட்-ஐ மெட்டா நிறுவனம் கொண்டு வந்துவிட்டது. ஐபாட் வைத்திருக்கும் யூசர்கள் அதில், வாட்ஸ்அப்-ஐ (WhatsApp) பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரத்தில் மல்டி-டிவைஸ் டெக்னாலஜி (Multi-device Technology) மூலம் ஐபோன், மேக் மற்றும் மற்ற டிவைஸ்களுடன் சிங்க் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புதிய ஆப்-ஐ எப்படி பெறுவது? எந்த ஐபாட் வெர்ஷனில் (iPad Version) பயன்படுத்த கிடைக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.
ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமல்லாமல், ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கும் வாட்ஸ்அப் தவிர்க்க முடியாத இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப்-ஆக மாறிவிட்டது. ஸ்டேட்டஸ், டெக்ஸ்ட், போட்டோ, வீடியோ போன்றவற்றை பகிர முடிவதால், சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மாகவும் உருவெடுத்து வருகிறது. இதனால், ஐபாட் ஓ.எஸ் யூசர்களுக்கும் அதன் தேவை ஏற்பட்டது. ஆனால், மெட்டா ஐபாட்ஓஸ் யூசர்களும் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தும்படியான அப்டேட்டை பல வருடங்களாக கொண்டுவராமல் இருந்தது. இருப்பினும், ஐபாட்ஓஎஸ் யூசர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இந்த கோரிக்கைகளின் அடிப்படையில், மெட்டா நிறுவனம் தற்போது செய்துள்ளது. ஐபாட்ஓஎஸ் 1.51 (iPadOS 15.1) அல்லது அதற்கு பிறகான ஓ.எஸ். களில் இனி வாட்ஸ்அப் கிடைக்கும்.
ஐபாடில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?
- ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம்: உங்கள் ஐபாடில் உள்ள ஆப் ஸ்டோர் (App Store) க்குச் சென்று "WhatsApp Messenger" என்று தேடி, ஆப்ஸை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
- அக்கவுண்ட்டை இணைத்தல் (Linked Device):
- ஆப்ஸைத் திறந்ததும், "Continue" என்பதைத் தட்டவும்.
- அடுத்து, உங்கள் ஐபாடில் ஒரு QR குறியீடு தோன்றும்.
- இப்போது, உங்கள் ஐபோன் (அ) ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ்அப்-ஐ திறந்து, Settings (அமைப்புகள்) அல்லது More Options (மேலும் விருப்பங்கள்) > Linked Devices (இணைக்கப்பட்ட சாதனங்கள்) என்பதற்குச் செல்லவும்.
- "Link a Device" (சாதனத்தை இணைக்கவும்) என்பதைத் தட்டி, உங்கள் ஐபோன் மூலம் ஐபாடில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
- ஸ்கேன் வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் வாட்ஸ்அப் சாட்டுகள் உங்கள் ஐபாடிலும் சிங்க் (sync) ஆகிவிடும்.
ஐபாட் வாட்ஸ்அப்-இன் சிறப்பம்சங்கள்:
- பெரிய திரைக்கான UI: ஐபாடின் பெரிய திரைக்கு ஏற்ப வாட்ஸ்அப் UI (User Interface) மேம்படுத்தப்பட்டுள்ளது.
- மல்டிடாஸ்கிங்: iPadOS-இன் Stage Manager, Split View, மற்றும் Slide Over போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும்போதே, இணையத்தில் தேடலாம் அல்லது ஒரு கால்-இல் இருக்கும்போது ஒரு குழு பயணத்திற்கான விருப்பங்களை ஆராயலாம்.
- ஆடியோ, வீடியோ கால்ஸ்: 32 பேர் வரை ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளலாம். ஸ்கிரீன் பகிர்வு (screen sharing) மற்றும் முன்புற/பின்புற கேமராக்களை மாற்றுவது போன்ற அம்சங்களும் உள்ளன.
- End-to-End Encryption: உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் எப்போதும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனால் பாதுகாக்கப்படும்.
- Chat Lock: உங்கள் ஐபாடை மற்றவர்களுடன் பகிர்ந்தாலும், தனிப்பட்ட உரையாடல்களைப் பாதுகாக்க சேட் லாக் வசதி உள்ளது.
- கீபோர்டு, ஆப்பிள் பென்சில் ஆதரவு: மேஜிக் கீபோர்டு (Magic Keyboard), ஆப்பிள் பென்சில் (Apple Pencil) ஆகியவற்றுடன் தடையின்றி இயங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.