இன்ஸ்டா, ஃபேஸ்புக் பயனர்களுக்கு குட் நியூஸ்: மெட்டாவின் ஏ.ஐ. வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் அறிமுகம்!

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஏ.ஐ.யால் இயங்கும் வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம், கிரியேட்டர்கள் தங்கள் வீடியோக்களை வேறு மொழியில் டப்பிங் செய்ய உதவுகிறது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஏ.ஐ.யால் இயங்கும் வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம், கிரியேட்டர்கள் தங்கள் வீடியோக்களை வேறு மொழியில் டப்பிங் செய்ய உதவுகிறது.

author-image
WebDesk
New Update
voice translation

இன்ஸ்டா, ஃபேஸ்புக் பயனர்களுக்கு குட் நியூஸ்: மெட்டாவின் ஏ.ஐ. வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் அறிமுகம்!

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, ஏ.ஐ.யால் இயங்கும் வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் அம்சத்தை, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் அனைவருக்கும் உலகம் முழுவதும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. படைப்பாளிகள் தங்கள் கண்டெண்ட்டை மொழி தடைகளைத் தாண்டி விரிவுபடுத்தி, புதிய பார்வையாளர்களை அடைய இது பெரிதும் உதவும்.

Advertisment

மெட்டா ஏ.ஐ. சேவை கிடைக்கும் அனைத்து இடங்களிலும் இந்த அம்சம் செயல்படும். இதன் மூலம், படைப்பாளிகள் தங்கள் தனித்துவமான குரல், தொனி மற்றும் பாணியைப் பராமரித்தபடியே, தாங்கள் உருவாக்கும் வீடியோக்களை வேறு மொழியில் டப்பிங் (dubbing) செய்யலாம்.

கடந்த ஆண்டு மெட்டாவின் 'கனெக்ட்' டெவலப்பர் மாநாட்டில் இந்த அம்சம் முதன்முதலில் முன்னோட்டமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, ரீல்களில் கிரியேட்டர்கள் குரல்களை தானாக மொழிபெயர்க்கும் சோதனை முயற்சிகளை நிறுவனம் வெளியிட்டது. தற்போது, இந்த அம்சம் ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிஷ் மொழிக்கும், ஸ்பானிஷிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கும் வசதியுடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எதிர்காலத்தில், மேலும் பல மொழிகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதட்டு அசைவுடன் கூடிய துல்லியமான டப்பிங்

மெட்டாவின் வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் கண்டெண்ட் கிரியேட்டர்களின் சொந்தக் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உருவாக்குகிறது. இதனால், டப்பிங் செய்யப்பட்ட கண்டெண்ட் செயற்கையானதுபோல இல்லாமல், மிகவும் இயல்பாக ஒலிக்கிறது. இது விருப்ப தேர்வாக 'உதட்டு அசைவு (lip-sync)' அம்சத்தையும் வழங்குகிறது. இதன் மூலம், மொழிபெயர்க்கப்பட்ட பேச்சு, வீடியோவில் உள்ள நபரின் உதட்டு அசைவுகளுடன் ஒத்துப் போகிறது. இது பார்வையாளர்களுக்கு தடையற்ற மற்றும் உண்மையான வீடியோ அனுபவத்தைக் கொடுக்கிறது.

பயன்படுத்துவது எப்படி?

Advertisment
Advertisements

ரீல்ஸ் பதிவிடும் முன், கிரியேட்டர்கள் "Translate your voice with Meta AI" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பதிவிடுவதற்கு முன், மொழிபெயர்ப்பு மற்றும் உதட்டு அசைவுகளைப் பார்க்க முடியும். மேலும், எப்போது வேண்டுமானாலும் இந்த அம்சத்தை முடக்கி விடலாம். இதனால் அசல் வீடியோ பாதிக்கப்படாது. ஒரு ரீல் AI மூலம் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், அதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அதற்கான குறிப்பு ஒன்று சிறியதாகத் திரையில் காண்பிக்கப்படும்.

இந்த அம்சம் ஆரம்பத்தில், 1,000க்கும் மேற்பட்ட ஃபாலோவர்களை கொண்ட பேஸ்புக் படைப்பாளிகளுக்கும், அனைத்து பொது இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கும் கிடைக்கிறது. ஏ.ஐ. டப்பிங் தவிர, ஃபேஸ்புக் கிரியேட்டர்கள் தங்கள் சொந்த ஆடியோ டிராக்குகளையும், ஒரு ரீலுக்கு 20 டிராக்குகள் வரை மெட்டா பிசினஸ் சூட் (Meta Business Suite) வழியாகப் பதிவேற்றலாம். இதன் மூலம், ஆங்கிலம் அல்லது ஸ்பானிஷ் மொழி பேசாத பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களையும் சென்றடைய முடியும்.

கூடுதலாக, மெட்டா, இன்சைட்ஸ் (Insights) பகுதியில் புதிய அளவீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, கிரியேட்டரின் கண்டெண்ட்டை எந்தெந்த மொழி பேசும் பார்வையாளர்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும். புதிய மொழிகள் சேர்க்கப்படும்போது, சர்வதேசப் பார்வையாளர்களுடன் அவர்கள் எவ்வாறு ஈடுபாடு கொள்கிறார்கள் என்பதை கண்காணிக்க இது உதவும். சிறந்த முடிவுகளுக்கு, கிரியேட்டர்கள் நேராகப் பார்த்துப் பேசுமாறும், தெளிவாகப் பேசுமாறும், பின்னணி சத்தத்தைத் தவிர்ப்பதுடன், ரீல்களில் 2-க்கும் மேற்பட்டவர்கள் பேசுவதைத் தவிர்க்கவும் மெட்டா அறிவுறுத்துகிறது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: