உலகளவில் பேஸ்புக்கை பயன்படுத்துவோரின் தினசரி எண்ணிக்கையானது, ஆப்பிளின் தனியுரிமை மாற்ற கொள்கை, டிக்டோக் போன்ற போட்டி நிறுவனங்களால் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, பேஸ்புக் உரிமையாளரான மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் தினசரி ஆக்டிவ் கேஸ்கள் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 1.930 பில்லியனில் இருந்து 1.929 பில்லியனாக குறைந்துள்ளது.
மெட்டா கூறுகையில், ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய தனியுரிமை மாற்றம் கொள்கையால், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் குறிப்பிட்ட பிராண்டிகளை விளம்பரங்களை அளவிடும் பணியை கடினமாக்கியுள்ளதால், விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பின்னடைவை சந்தித்துள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் மற்றும் யூடியூப் தளத்தின் போட்டிகளை எதிர்கொள்ளும் மெட்டா நிறுவனம், பயனர்கள் நேரம் மற்றும் ரீல்ஸ் போன்ற வீடியோவை பார்க்க அதிக நேரம் ஒதுக்குவது போன்றவற்றால் வரும் காலாண்டில் வருவாய் வளர்ச்சி குறையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் நான்காவது காலாண்டில் மாதாந்திர ஆக்டிவ் பயனாளர்கள் 2.91 பில்லியன் ஆக இருப்பதாக அறிவித்தது. ஆனால், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் எந்த வளர்ச்சியும் இல்லை என்பது தான் உண்மை.
மெட்டா பங்குகள் ஏற்பட்ட சரிவு காரணமாக, அதன் சந்தை மதிப்பில் சுமார் 200 பில்லியன் டாலரை இழந்துள்ளது. இதுமட்டுமின்றி, Twitter Inc, Snap Inc மற்றும் Pinterest Inc ஆகியவை அதன் மதிப்பில் 15 பில்லியன் டாலரை இழந்துள்ளது.
செவ்வாயன்று எதிர்பார்ப்புகளை தாண்டிய காலாண்டு விற்பனையை பதிவு செய்த ஆல்பாபெட் இன்க் பங்குகள் கிட்டத்தட்ட 2% சரிந்தது குறிப்பிடத்தக்கது.
கூகுளுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய டிஜிட்டல் விளம்பர தளத்தின் உரிமையாளரான மெட்டா நான்காவது காலாண்டில் அதன் விளம்பர வணிகம் "குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை" எதிர்கொண்டதாக முன்னரே எச்சரித்திருந்தது.
மெட்டா நிறுவனம் தொடர்ச்சியாக வருவாய் இழப்பை சந்தித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil