உலக அளவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. எல்லாம் நவீன மையமாகி வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மேம்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன்கள், டேப், ஸ்மார்ட் வாட்ச் என பல்வேறு சாதனங்கள், புது புது வசதிகள் அறிமுகமாகி வருகின்றன.
Advertisment
அந்தவகையில், மெட்டா நிறுவனம் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்த உள்ளது. வரும் அக்டோபர் மாதம் நிறுவனம் இந்த ஹெட்செட்டை அறிமுகப்படுத்தும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் உறுதிப்படுத்தினார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜுக்கர்பெர்க், நிறுவனத்தின் வருடாந்திர கனெக்ட் நிகழ்ச்சியில் ஹெட்செட் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த புதிய ஹெட்செட் ப்ராஜெக்ட் கேம்ப்ரியா (Project Cambria) என அழைக்கப்படுகிறது. இதில் பல வசதிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் கண்காணிப்பு, முக கண்காணிப்பு eye tracking and facial tracking வசதிகள் கொண்டுள்ளது. இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மூலம் தூரத்தில் உள்ளவர்களுடன் ஐ கான்டெக்ட் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என ஜுக்கர்பெர்க் கூறினார்.
மேலும், இந்த ஹெட்செட்யில் நம்முடைய ரியாக்ஷன்களை சென்சார் செய்து காண்பிக்கும் வசதி உள்ளது. நாம் சிரிப்பு, கவலை, போஸ் கொடுத்தல் என அனைத்து பாவனைகளையும் சென்சார் செய்து ரியல்டெமில் காண்பிக்கிறது. புது வசதியாகவும் பயனர்களை கவரும் வசதியாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
'ப்ராஜெக்ட் கேம்ப்ரியா' ஹெட்செட் மெட்டா குவெஸ்ட் ப்ரோவாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜுக்கர்பெர்க் இந்த ஹெட்செட் குறித்த சிறு வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதன்படி, உயர்தர குவாலிட்டி கலர் டிஸ்பிளே, hand tracking, விர்ச்சுவல் ஆபிஸ் மீட்டிங் (virtual office meeting) என பலவசதிகள் கொண்டுள்ளது.
399 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 31,904) விலையுள்ள தற்போதைய மெட்டா குவெஸ்ட் ஹெட்செட்டை விட புதிய ஹெட்செட் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.