New Update
00:00
/ 00:00
மெட்டா நிறுவனம் இந்தியா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் கொலம்பியாவில் உள்ள வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கு மெட்டா வெரிபைட் அம்சம் அறிமுகம் செய்யப்படுவாக சமீபத்தில் அறிவித்தது. மெட்டா வெரிபைட் என்பது X தளத்தில் உள்ளது போல் இது அதிகாரப்பூர்வமாக நிறுவனம் என்பதற்கான ப்ளூ டிக் வசதி ஆகும்.
இந்த சந்தாவை பிசினஸ் பயனர்கள் மெட்டாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். வெறும் ப்ளூ டிக் வசதி மட்டுமல்லாமல் வெரிபைட் பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை நிறுவனம் வழங்குகிறது. மார்க்கெட்டிங் வசதிகளுக்காக தனி வாட்ஸ்அப் சேனல், கஸ்டம் வைப் பேஜ் உருவாக்கம்இ ஏ.பி.ஐ மூலம் காலிங் வசதி போன்ற வசதிகளை வழங்குகிறது.
ஏ.பி.ஐ பயன்படுத்தி பயனர்கள் வாட்ஸ்அப் பிசினஸ் நபர்களை அழைக்கும் வகையில் புதிய அம்சமும் கொண்டு வரப்படுகிறது. இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு Customer support number ஆக பயன்படுகிறது. இதன் மூலம் பிசினஸ் ஓனர்கள் தங்கள் தனிப்பட்ட எண்ணைப் பகிரத் தேவையில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.