Advertisment

எல்லா ஷாப்பிங் மாலும் போயாச்சா… விரைவில் வருகிறது மெட்டாமால்

மெட்டாவர்ஸில் உள்ள மெட்டாமால் தளத்தில் பயனர்கள் சொந்தமான இடங்களை வாங்கலாம். நிஜ உலகை போல், மெய்நிகர் வாயிலாக ஷாப்பிங் மாலுக்கு சென்று அங்கிருக்கும் மக்களுடன் உரையாடலாம்.

author-image
WebDesk
New Update
எல்லா ஷாப்பிங் மாலும் போயாச்சா… விரைவில் வருகிறது மெட்டாமால்

ஷாப்பிங் மால் அனைத்து வயது தரப்பினரும் சந்திக்கும் இடமாக மாறிவிட்டது. போர் அடிக்கிறது என ஷாப்பிங் மாலுக்கு கார் அல்லது பைக்கை எடுத்துக்கொண்டு செல்லும் கூட்டம் உள்ளது. ஆனால், நினைத்து பாருங்கள் நீங்கள் வீட்டிலிருந்தப்படியே மாலுக்கு சென்று மக்கள் உரையாடலாம், ஷாப்பிங் செய்யலாம் என சொன்னால் நம்புவீர்களா? ஆம், மெட்டாவெர்ஸ் உலகில் அது சாத்தியம். மெட்டாமால் எனப்படும் விர்ச்சுவல் மால் விரைவில் வரவுள்ளது.

Advertisment

Metamal இன் இணை நிறுவனரான Serge Gianchandani கூறுகையில், " ஈ-காமர்ஸ் ஷாப்பிங் தளத்தில் நீங்கள் பார்ப்பதை ஒரு சிறந்த காட்சி அனுபவத்துடன் இணைப்பதே மெட்டாவெர்ஸ் மால் யோசனையாகும். பயனர்கள் மெய்நிகர் மாலில் நுழைந்து உண்மையான நபர்களுடன் உரையாடலாம் என்றார்.

2021இல் தொடங்கிய Metamall, மெய்நிகர் ரியல் எஸ்டேட் டெவலப்பராக உள்ளது. இது பயனர்களுக்கு மெட்டாவெர்ஸில் ரியல் எஸ்டேட் வாங்க உதவுகிறது.

publive-image

மெட்டாமால் என அழைக்கப்படும் மெட்டாவர்ஸ் ஷாப்பிங் சென்டர், சோலனாவில் கட்டப்பட்ட ஒரு தளமாகும். இது பயனர் உருவாக்கிய பிளாக்செயின் அடிப்படையிலான மெய்நிகர் உலகமாகும்.

இதுகுறித்து பேசிய மெட்டாமாலின் வணிக மேம்பாட்டுத் தலைவர் சஹான் ரே, "நீங்கள் மெட்டாமாலில் ஒரு இடத்தை வாங்கலாம் அல்லது குத்தகைக்கு விடலாம். அந்த இடம் உங்களுடையதாகிவிடும்.

ஆரம்பத்தில், மெட்டாமாலில் 20 பிராண்டிகளின் தயாரிப்புகளை வைக்க முடிவுசெய்துள்ளது. அதில், பெரிய பிராண்ட் தயாரிப்பு முதல் அழகுசாதனப் பிராண்டுகள் வரை இருக்கும். இந்த மெட்டாமால் ஏப்ரலில் பொதுமக்கள் வருகைக்ககா திறக்கப்படும். அடுத்த ஆறு மாதங்களில், 200 முதல் 250 பிராண்டிகளின் தயாரிப்புகள் மாலில் இடம்பெற்றிருக்கும்.

மெட்டாமாலை ஒரு பல்நோக்கு ஷாப்பிங் மால் ஆகும். அதில், அலுவலக இடங்கள் மற்றும் தனியான கேமிங் இடங்கள் உள்ளன. இது அடிப்படையில் ஒரு நகரத்தைப் போன்றது.ரியல் எஸ்டேட்டை சொந்தமாக வைத்திருக்கலாம். அதிலிருந்து வருமானம் ஈட்டலாம்.

900 சதுர அடி இடத்தை சொந்தமாக வைத்திட 225 டாலர் செலவாகிறது. பெரிய இடங்களை சொந்தமாக்க 27 ஆயிரம் டாலர் வரை செலவாகும். நாங்கள் அந்த இடங்களை விற்பனை செய்வோம்.

ஒவ்வொரு இடமும் ஒரு NFT மற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கொண்டுள்ளது. நீங்கள் அதை விற்க விரும்பினால், நீங்கள் சந்தைக்குச் செல்ல வேண்டும். தேவையின் அடிப்படையில், மக்கள் இடத்தை வாங்குவார்கள். நாம் அந்தச் சாவியை ஒருவரிடம் கொடுத்தால், அவரிடம் சாவி இருந்தால், அவர் சாவியை மாற்ற முடியும். சாவியை ஒருவருக்கு மாற்றும் போது ஒரு வழிமுறை உள்ளது. அது நடந்துவிட்டால், இனிமேல் எங்களுக்கு அப்பகுதியில் எவ்வித உரிமையும் கிடையாது என தெரிவித்தார்.

publive-image

MetaMetric சொல்யூஷன்ஸ் படி, மெட்டாவெர்ஸ் ரியல் எஸ்டேட் விற்பனை 2021 இல் $501 மில்லியனை எட்டியது. உண்மையில், ஜனவரி மாதத்தில் மட்டும் விற்பனை $85 மில்லியனை எட்டியது. 2022 இல் கிட்டத்தட்ட $1 பில்லியனை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Sandbox, Decentraland, Cryptovoxels மற்றும் Somnium ஆகியவை இந்த சந்தையில் முன்னணியில் உள்ளன.

மேலும் பேசிய அவர், " Metaverse பாரம்பரிய சில்லறை சந்தையை மாற்றாது. ஆனால் ஆன்லைன் விற்பனை இருப்பதை போல் கூடுதல் அடுக்காக செயல்படும். தற்போதைக்கு, விர்ச்சுவல் மால் என்ற கருத்து பெரிய சில்லறை வணிகச் சங்கிலிகள் , பெரிய அளவிலான வணிக வளாகங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. டிஜிட்டல் மற்றும் நிஜ உலகத்துடனான தொடர்புகளில் வர்த்தகத்தை ஒருங்கிணைக்கும் போது தாக்கம் வரும்.

மக்கள் NFTகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் உடைகள் மற்றும் ஸ்னீக்கர்களை வாங்குகிறார்கள். பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பல மெய்நிகர் உலகங்களை இணைக்கும் இணையத்தின் அடுத்த பதிப்பை அழைக்க விரும்புவதால், மெட்டாவேர்ஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில், இது எவ்வாறு உருவாகும் மற்றும் எத்தனை பயனர்கள் இதைப் பயன்படுத்துவார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் Metaverse இருக்கும். அது செயல்படும் என்பதை நாங்கள் அறிவோம் என தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Meta
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment