மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளம் இளைஞர்களுக்கு பிடித்த செயலியாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனமும் புதுபுது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் லாக்கினை ஒரே இடத்தில் செய்யும்படி புது அம்சத்தை கொண்டு வரவுள்ளது. ஒரே அக்கவுண்ட் மையத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் சேவ் செய்து அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். இந்த வசதி ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பயனர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் லாக்கின் மற்றும் சைன்-அப் பக்கத்தை மாற்றியுள்ளது. பயனர்கள் இதைப் பயன்படுத்தி புதிய அக்கவுண்ட் ஓபன் செய்தும் கொள்ளலாம். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
இந்த புது வசதியைப் பயன்படுத்த பயனர்கள் தங்களது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டு அக்கவுண்ட்களையும் இந்த புது அம்சத்தில் இணைக்க வேண்டும். அப்போது தான் பயன்படுத்த முடியும். இந்த புது அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது.