பொதுவான மற்றும் விரைவான டிக்கெட் சேவைக்கு முதல் படியாக, சென்னை மெட்ரோ ரயிலின் சிங்கார சென்னை கார்டு உட்பட தேசிய பொது இயக்க அட்டை (NCMC) மூலம்
சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கும் வகையில் புது வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
மாநகரப் பேருந்தில் பயணம் செய்யும் மெட்ரோ கார்டு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வகையில் வசதி கொண்டு வரப்படுகிறது. இது நவம்பர் இறுதியில் இருந்து அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
சில பேருந்து வழித்தடங்களில் என்.சி.எம்.சி கார்டுகளைப் பயன்படுத்துவதற்கான முன்முயற்சியை கார்ப்பரேஷன் மேற்கொண்டது, அது வெற்றியடைந்தது என நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறினார்.
சில வழிகளில் என்.சி.எம்.சி கார்டு அடிப்படையிலான கட்டணங்களை ஏற்க சில மின்னணு டிக்கெட் இயந்திரங்களை நாங்கள் புதுப்பித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
யு.பி.ஐ பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனைகளை வரவேற்கும் வகையில் பேருந்து நடத்துனர்களுக்கு மாநகராட்சி இரண்டு நாள் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டெபிட்,
கிரெடிட் கார்டு அடிப்படையிலான பரிவர்த்தனை, யு.பி.ஐ மூலம் டிக்கெட் பெறுவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பபட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“