Advertisment

கைக்கு அடக்கமான விலையில் ஸ்மார்ட் டிவி: உங்களுக்கான லிஸ்ட் இங்கே

ரூ.25,000-க்கு கீழ் புதிய டிவியை வாங்குவதற்கு முன், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் சில அசத்தலான சலுகைகளின் பட்டியல் இங்கே!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Best tv offers under 25000 in flipkart amazon sales tamil news

Best tv offers under 25000 in flipkart amazon sales

Smart TV Deals Tamil News: கடந்த சில நாட்களில், மக்கள் கவனத்தை ஈர்க்கும் சில சலுகைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இது, புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான சிறந்த நேரம் மட்டுமல்ல, ஸ்மார்ட் டிவியில் அதிக செலவு செய்ய விரும்பாதவர்கள் புதிய டிவி வாங்குவதற்கும் சிறந்த நேரம்தான். கோவிட் -19 தொற்றுநோய் வெளி உலகத்திற்கான உங்களுடைய பயணங்களை மட்டுப்படுத்தியுள்ள இந்தக் காலகட்டத்தில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் பிற OTT தளங்களில் சமீபத்திய திரைப்படங்களைக் கண்டு மகிழ ஸ்மார்ட் டிவிகள் நிச்சயம் கைகொடுக்கும். ரூ.25,000-க்கு கீழ் புதிய டிவியை வாங்குவதற்கு முன், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் சில அசத்தலான சலுகைகளின் பட்டியல் இங்கே!

Advertisment

ஒன்ப்ளஸ் 43Y1

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒன்ப்ளஸ் அதன் Y சீரிஸின் மிகவும் மலிவு விலை தொலைக்காட்சி பிரிவைத் தொடங்கியது. ஒன்ப்ளஸ் 43Y1, தற்போது அமேசானில் ரூ.23,990 விலையில் 'பெஸ்ட் செல்லராக' பட்டியலிடப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட்டிலும் இந்த டிவி கிடைக்கிறது. 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் முழு HD டிஸ்ப்ளேவை இந்த டிவி கொண்டுள்ளது. மேலும், இரண்டு எச்.டி.எம்.ஐ மற்றும் இரண்டு யூ.எஸ்.பி போர்ட்களையும் கொண்டிருக்கிறது. இது, ஆண்ட்ராய்டு டிவி 9.0 மூலம் இயங்குகிறது மற்றும் உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட்டும் உள்ளது. கேமிங்கைப் பொறுத்தவரை, உங்கள் கன்சோலை இணைக்க விரும்பினால், உங்களுக்காக Mali470 டிரிபிள் கோர் கிராபிக்ஸ் கோப்ராசசர் உள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் ரிமோட் மூலம் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் யூடியூப் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தலாம். ஒலி வெளியீட்டைப் பொருத்தவரை, 20W ஸ்பீக்கர்களில் டால்பி ஆடியோ ஆதரவு உள்ளது.

Mi டிவி 43A ஹாரிஸான் பதிப்பு

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு தொலைக்காட்சி, Mi TV 43A ஹாரிஸான் பதிப்பு. இது, அதன் முன்னோடிகளின் மிகவும் மெல்லிய பதிப்பு எனலாம். இது, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் முழு HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கேமிங்கைப் பொறுத்தவரை, Mali-450 MP3  கிராஃபிக்ஸ் கோப்ராசசரைக் கொண்டுள்ளது. பயனர்கள், இரண்டு யூ.எஸ்.பி மற்றும் மூன்று எச்.டி.எம்.ஐ இணைப்புகளை இந்த டிவியுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். டால்பி ஆடியோ மற்றும் DTS-H ஒலியை ஆதரிக்கும் 20W ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. மேலும் இது, ஆண்ட்ராய்டு டிவி 9.0 அடிப்படையிலான இயக்க முறைமையில் சில மாற்றங்களுடன் இயங்குகிறது. கூகுள் அசிஸ்டென்ட்டை எளிதில் உபயோகிக்க முடியும். அதுமட்டுமின்றி, டிவியில் கூகுள் டேட்டா சேவர் உள்ளது.உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட்டுடன் வருகிறது. இது அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டில் ரூ.23,499-க்கு கிடைக்கிறது.

தாம்சன் 50OATHPRO1212

50 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் அல்ட்ரா HD (4K) ரெசல்யூஷன் கொண்ட பட்டியலில் இது மிகப்பெரிய டிவி. தாம்சன் 50OATHPRO1212 தற்போது ஃப்ளிப்கார்ட்டில் ரூ.24,999-க்கு கிடைக்கிறது. புதுப்பிப்பு விகிதம் 60 ஹெர்ட்ஸ் மற்றும் டால்பி விஷன் ஆதரவை இந்த டிவி கொண்டுள்ளது. கேமிங்கிற்கு, Mail450 குவாட் கோர் கிராஃபிக்ஸ் கோப்ராசசரைக் கொண்டுள்ளது. மேலும், DTS TruSurround, டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவுடன் 30W ஸ்பீக்கர் இருக்கிறது. அதுமட்டுமின்றி, மூன்று எச்.டி.எம்.ஐ மற்றும் இரண்டு யூ.எஸ்.பி போர்ட்களைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயக்க முறைமையில் இயங்குகிறது மற்றும் உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட்டையும் கொண்டிருக்கிறது. ஏர்ப்ளே ஆதரவு மற்றும் OTT இயங்குதளங்களுக்கான நான்கு பிரத்யேக பட்டன்களும் உள்ளன.

நோக்கியா 43TAFHDN

டிவி பிரிவில் நோக்கியா மிகவும் பிரபலமானது இல்லை. ஆனால், நோக்கியாவின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி, வியக்கவைக்கும் அதன் சொந்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் கூடிய முழு HD டிவியில் கேமிங்கிற்கான Mali 470 குவாட் கோர் கிராபிக்ஸ் கோப்ராசசர் உள்ளது. இது, க்ரோம்காஸ்ட் உள்ளமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு OS மூலம் இயங்குகிறது. பின்புறத்தில் இரண்டு யூ.எஸ்.பி மற்றும் எச்.டி.எம்.ஐ போர்ட்கள் உள்ளன. டிவியின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்ட மினி சவுண்ட்பார், 39W வெளியீட்டைக் கொண்ட குவாட்ராக்ஸ் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. டால்பி ஆடியோ மற்றும் ஓன்கியோவின் (Onkyo) சொந்த சான்றளிக்கப்பட்ட surround ஒலியை ஆதரிக்கிறது. இன்று நாம் காணும் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் சக்திவாய்ந்த ஒலி இல்லை. ஆனால், நோக்கியாவின் இந்த 43 இன்ச் டிவி மற்றதைவிடச் சிறந்த ஒலியைத் தருகிறது. இது ஃப்ளிப்கார்ட்டில் ரூ.22,999-க்கு கிடைக்கிறது.

ஒனிடா ஃபயர் டிவி பதிப்பு

மலிவு விலைப் பட்டியலில் மிகவும் சிறந்த ஆப்ஷன் ஒனிடா ஃபயர் டிவி பதிப்பு .பெயர் குறிப்பிடுவது போல் இது அமேசானின் ஃபயர் டிவி OS லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த ஃபயர் டிவி 16W ஸ்பீக்கர் வெளியீட்டைக் கொண்டிருக்கிறது. மேலும், டால்பி ஆடியோ மற்றும் DTS TruSurround ஆதரவையும் கொண்டுள்ளது. மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள் மற்றும் இரண்டு யூ.எஸ்.பி போர்ட்களை இந்த டிவி கொண்டிருக்கிறது. தற்போது இந்த டிவி ஃப்ளிப்கார்ட்டில் ரூ.21,900-க்கு கிடைக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Amazon Flipkart
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment