மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 5 பிளஸ் சிறப்பம்சங்கள்!

பாரத் 5 ஸ்மார்ட்போனைத் தொடர்ந்து, பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் அந்நிறுவனத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

பாரத் 5 ஸ்மார்ட்போனைத் தொடர்ந்து, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை சார்ந்து எவ்வித தகவலும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.2 இன்ச், 2.5D வளைந்த கிளாஸ் 720×1280 பிக்சல் டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்ஏஎச் பேட்டரி

முன்னதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 5 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் பாரத் 5 ஸ்மார்ட்போன், இந்தியாவில் ரூ.5,555 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close