Advertisment

பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்ஃபோன்: வாங்குபவர்களுக்கு செம்ம ஆஃபர்களை அளிக்கும் வோடஃபோன்

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 5,555 ரூபாய். இந்த ஸ்மார்ட்ஃபோன் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்ஃபோன்: வாங்குபவர்களுக்கு செம்ம ஆஃபர்களை அளிக்கும் வோடஃபோன்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 5,555 ரூபாய். இந்த ஸ்மார்ட்ஃபோன் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும்.

Advertisment

இந்த ஸ்மார்ட்ஃபோனில் 4ஜி வோல்ட், 5000 எம்.ஏ.எஹ். கொண்ட ஃபாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி, 1 ஜிபி ரேம், 16 ஜிபி உள்ளடக்க மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது.. இந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்குப்வர்களுக்கு வோடஃபோன் நிறுவனம் 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதன்படி மாதத்துக்கு 10 ஜிபி என்ற வீதத்தில் 5 மாதங்களுக்கு 50 ஜிபி கிடைக்கும்.

மேலும், இதில், 5.2 இன்ச் எச்.டி. டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின், 1280 x 720 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம் மென்பொருளை உள்ளடக்கியது.

5 எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், செல்ஃபி கேமரா 5 மெகா பிக்சலைக் கொண்டுள்ளது.

Micromax
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment