மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் விற்பனை செய்கிறது. மைக்ரோசாஃப்ட் தளத்தில் விற்பனையாகும் நோட் 8 ஸ்மார்ட்போன்களில் கார்டணா, வொர்டு, எக்செல், ஒன்நோட் மற்றும் அவுட்லுக் போன்ற செயலிகள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.
மைக்ரோசாஃப்ட் எடிஷன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில், 'மைக்ரோசாஃப்ட் லான்ச்சர்' கொண்டிருக்கும் என ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேசர் போன் மற்றும் கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மைக்ரோசாஃப்ட் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் தளத்தில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் 150 டாலர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்லாக் செய்யப்பட்ட கேலக்ஸி நோட் 8 (64 ஜிபி) மாடல் 779.99 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.50,348க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ப்ளூடூத் 5.0, எல்டிஇ
- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.