மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவையில் கொடுக்கப்பட்ட புதிய சாப்ட்வேர் அப்டேட்டால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உலகெங்கிலும் அதன் சேவையைப் பயன்படுத்தும் பயனர்களை பாதித்தது. குறிப்பாக மைக்ரோசாப்ட் 365 பயனர்களை பாதித்தது.
குறிப்பாக மைக்ரோசாப்ட்டின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CrowdStrike வழங்கிய தவறான அப்டேட் காரணமாக உலகம் முழுவதும் விமானம், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் பற்றி ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1995-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், மைக்ரோசாப்ட் "மூன்றாம் தர தயாரிப்புகளை" தயாரிக்கிறது. அதில் "சுவை இல்லை" என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“