/tamil-ie/media/media_files/uploads/2023/01/Microsoft_Reuters_NEW_1.jpeg)
Microsoft
ஆப்பிள் லேப்டாப், கணினி தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மூலம் ஓ,எஸ் சேவை வழங்கி வருகின்றன. குறிப்பாக விண்டோஸ் 10 வெர்ஷன் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விண்டோஸ் 10 சேவைக்கான அப்டேட் வசதிகளை விரைவில் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் அறிக்கையில், "விண்டோஸ் 10 வெர்ஷனுக்கான சேவை வசதிகள் முடிவுக்கு வரவுள்ளது. Windows 10 22H2 அப்டேட் வெர்ஷனே இறுதியானதாகும். அதோடு Windows 10-க்கான பாதுகாப்பு அப்டேட்கள் அக்டோபர் 14, 2025க்குள் முடிவடைந்து விடும். அதுவரை பெரிய விதமான அப்டேட்கள் இல்லாமல் மாதாந்திர அப்டேட் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.
மேலும், நிறுவனம் Windows 11 வெர்ஷனுக்கு மாறும்படி பயனர்களை அறிவுறுத்தி வருகிறது. விண்டோஸ் 11 வெளிவந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் 11 வெர்ஷன் ஒரிஜினல் விண்டோஸ் 10 ஓ.எஸ் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதேசமயம் விண்டோஸ் 7 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், விண்டோஸ் 11 வெர்ஷன் பணம் செலுத்தி வாங்க வேண்டும்.
இருப்பினும், அவர்கள் விண்டோஸ் 10 வெர்ஷன் இலவமாக பெறலாம். அப்போது விண்டோஸ் 11 வெர்ஷனுக்கு எளிதாக அப்டேட் செய்யலாம். HP, Dell, Lenovo, Asus, Acer மற்றும் Samsung போன்ற பிராண்டுகளில் இருந்து புதிய PC வாங்குபவர்களுக்கு Windows 11 முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.