Advertisment

உலகளவில் மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்: விமான நிறுவனங்கள், வங்கிகள் பெரும் பாதிப்பு

author-image
WebDesk
New Update
Microsoft

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய கிளவுட் சேவை செயலிழப்பு காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை தாமதப்படுத்துகின்றன. மேலும், மைக்ரோசாப்ட் 365 பயனர்கள் ஆப்ஸ் மற்றும் டீம்ஸ் மற்றும் பர்வியூ போன்ற சேவைகளை தற்போது பயன்படுத்த முடியவில்லை. 

Advertisment

மைக்ரோசாஃப்ட் சேவை செயலிழப்பால் மைக்ரோசாப்ட் 365 பயனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மென்பொருள் செயலிழப்பால் விமானம், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த  கிளவுட் சேவை செயலிழப்பு இன்று அதிகாலை 3:26 மணிக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் இது தற்போது சீர் செய்யப்பட்டுவருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Microsoft Defender, Intune, OneNote மற்றும் SharePoint Online போன்ற சில சேவைகளை Microsoft சீர் செய்துள்ளதாக தெரிகிறது, இருப்பினும் PowerBI, Fabric, Teams, Purview மற்றும் Viva Engage போன்ற டூல்கள் இன்னும் செயல்படவில்லை.

உலகளவில் விமான சேவை பாதிப்பு 

Advertisment
Advertisement

உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிளவுட் சேவை பாதிப்பால்  ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் போன்ற பல விமான நிறுவனங்கள் 147 விமானங்களை ரத்து செய்தும், 212 விமானங்களை தாமதமாகவும் இயக்கின. 

தங்கள் மொத்த விமானங்களில் 45 சதவீதம் மற்றும் 27 சதவீதம் தாமதிக்க வேண்டியுள்ளதாகவும் சன் கன்ட்ரி மற்றும் அலெஜியன்ட் தெரிவித்துள்ளன.

இந்தியாவில், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் ஆகியவை விமான சேவைகள் 
தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறியுள்ளது. குறிப்பாக டிக்கெட் முன்பதிவு சேவை, செக்-இன் மற்றும் விமான பற்றிய அப்டேட்களை வழங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment